search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கூட்டுறவு நிதி நிர்ணய கலந்தாய்வு கூட்டத்துக்கு அனைத்து விவசாயிகளையும் பாரபட்சமின்றி அழைக்க வேண்டும்- தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

    ஒரு சிலரை மட்டும் வைத்து இணைப்பதிவாளர் கூட்டம் நடத்தியது குறித்து திருப்பூர் கலெக்டர் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    திருப்பூர்:

    மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் வழங்கப்பட வேண்டிய பயிர்க்கடன், விவசாய நகைக்கடன் உள்ளிட்ட கடன் திட்டம் குறித்து கூட்டுறவு இணைபதிவாளர் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசிக்கிறது.

    இந்தநிலையில் திருப்பூர் கூட்டுறவு இணைப்பதிவாளர் அலுவலக கலந்தாய்வு கூட்டத்துக்கு விவசாயிகளை புறக்கணித்தது குறித்து  திருப்பூர் கலெக்டர் நடவடிக்கை எடுக்க, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

    இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத்தலைவர் மதுசூதனன், செயலாளர் குமார் கூறியதாவது:-

    திருப்பூர் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை சார்பில் வரும் நிதியாண்டில் வழங்க வேண்டிய நிதி நிர்ணயம் தொடர்பான கலந்தாய்வு கூட்டத்துக்கு விவசாயிகளுக்கு முறையாக தகவல் தெரிவிக்கவில்லை.

    கோவை மாவட்டத்தில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஏற்பாட்டில் நடக்கும் நிதி நிர்ணய ஆலோசனைக்கு அனைத்து விவசாயிகள் சங்க பிரதிநிதிகளும் முறையாக அழைக்கப்படுகின்றனர். ஆனால் திருப்பூரில் அந்த நடைமுறையை கூட்டுறவு துறையினர் பின்பற்றுவதில்லை.

    ஒரு சிலரை மட்டும் வைத்து இணைப்பதிவாளர் கூட்டம் நடத்தியது குறித்து  திருப்பூர் கலெக்டர் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து சங்க பிரதிநிதிகளையும் பாரபட்சமின்றி அழைக்க வேண்டும். இவ்வாறு  அவர்கள் கூறினர்.
    Next Story
    ×