search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    அவிநாசி பேரூராட்சி பகுதியில் கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.11.61 கோடியில் திட்ட அறிக்கை - அரசுக்கு அனுப்பி வைப்பு

    ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நிதி கேட்டு மீண்டும் அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
    அவிநாசி:

    அவிநாசி பேரூராட்சிக்கு உட்பட்ட பழைய பஸ் நிலைய பகுதியில் இருந்த மார்க்கெட் வளாகம் பழைய கட்டிடமாக இருந்ததால் கடந்த 3 ஆண்டுக்கு முன் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. அங்கு கடைகள், வாகன பார்க்கிங் தளம் மற்றும் கூட்ட அரங்கு உள்ளடக்கிய வணிக வளாகம் கட்ட பேரூராட்சி சார்பில் ரூ.6 கோடிக்கு ஏற்கனவே திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு அரசின் நிதி ஒதுக்கீடு பெற அனுப்பி வைக்கப்பட்டது. 

    ஆனால் நிதி கிடைக்காத நிலையில் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நிதி கேட்டு மீண்டும் அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

    அவ்வகையில் சேவூர் ரோடு - சூளையில் அடுக்குமாடி குடியிருப்பு முன் 20 கடை கொண்ட வணிக வளாகம், கைகாட்டிப்புதூர் வாரச்சந்தையில் 10 கடை கொண்ட வணிக வளாகம் அமைக்கவும் நிதி கேட்கப்பட்டுள்ளது.

    முத்துசெட்டிபாளையத்தில் சமுதாயக்கூடம் அமைக்க ரூ.50 லட்சம், 13வது வார்டில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்தேக்க தொட்டி, புதிய பஸ் ஸ்டாண்டில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்தேக்க தொட்டி அமைக்கவும் நிதி கோரப்பட்டுள்ளது.

    இது தவிர நாயக்கன்தோட்டம் பகுதியில் கழிவு நீர் கால்வாயுடன் கூடிய ரோடு அமைக்க ரூ.30 லட்சம் என பல்வேறு பணிகளுக்கு மொத்தம் ரூ.11.61 கோடி மதிப்பில் வளர்ச்சிப்பணி மேற்கொள்ள நிதி கேட்டு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.
    Next Story
    ×