search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எக்ஸ்பிரஸ் ரெயில்
    X
    எக்ஸ்பிரஸ் ரெயில்

    கொல்லம் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று செங்கோட்டையில் இருந்து புறப்படும்- அதிகாரிகள் தகவல்

    சென்னை எழும்பூரில் இருந்து கொல்லத்திற்கு இயக்கப்படும் தினசரி விரைவு ரெயில் நேற்று இரவு செங்கோட்டையுடன் நிறுத்தப்பட்டது.
    நெல்லை:

    கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் பெய்து வரும் மழையால் சில ரெயில்கள் சேவை பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் தமிழகத்திலும் சில ரெயில்கள் முழுவதுமாகவும், சில ரெயில்கள் பகுதியாகவும் ரத்து செய்யப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் நேற்று அதிகாலை கேரள மாநிலம் ஆரியங்காவு பகுதியில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது.

    இந்த நிலச்சரிவால் ரெயில்வே தண்டவாளத்தில் பாறைகள் உருண்டு விழுந்தன. இதன் காரணமாக அந்த வழியாக கேரளா- தமிழகம் இடையே இயக்கப்பட்டு வரும் ரெயில்கள் நிறுத்தப்பட்டன.

    நெல்லை சந்திப்பில் இருந்து பாலக்காடு சந்திப்புக்கு இயக்கப்பட்டு வந்த பாலருவி எக்ஸ்பிரஸ் பகுதியாக ரத்து செய்யப்பட்டது.

    நேற்று நள்ளிரவு 11.20 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட வேண்டிய இந்த ரெயில் நெல்லை-புனலூர் இடையே ரத்து செய்யப்பட்டது.

    இந்நிலையில் சென்னை எழும்பூரில் இருந்து கொல்லத்திற்கு இயக்கப்படும் தினசரி விரைவு ரெயில் நேற்று இரவு செங்கோட்டையுடன் நிறுத்தப்பட்டது. கொல்லத்திற்கு செல்லவில்லை.

    மறுமார்க்கமாக இன்று கொல்லத்தில் புறப்பட வேண்டிய கொல்லம் எக்ஸ்பிரஸ், செங்கோட்டையில் இருந்தே புறப்படுகிறது. நிலச்சரிவு ஏற்பட்ட ஆரியங்காவு பகுதியில் முழுமையாக சீரமைப்பு பணிகள் முடிந்தவுடன் ரத்து செய்யப்பட்ட ரெயில்கள் மீண்டும் இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×