search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோயம்பத்தூர் ரெயில் நிலையம்
    X
    கோயம்பத்தூர் ரெயில் நிலையம்

    பாபர் மசூதி இடிப்பு தினம்- கோவையில் ரெயில், பஸ் நிலையத்தில் பலத்த பாதுகாப்பு

    கோவையில் உள்ள பஸ் நிலையங்கள், ரெயில் நிலையம், விமான நிலையம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.
    கோவை:

    பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6-ந்தேதி ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது.

    பாபர் மசூதி வழக்கில் தீர்ப்பு கூறப்பட்ட பிறகும் இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இதன் ஒரு பகுதியாக இன்று கோவை மாநகர் முழுவதும் 1,500-க்கும் மேற்பட்ட போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    கோவையில் உள்ள பஸ் நிலையங்கள், ரெயில் நிலையம், விமான நிலையம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டனர். இதுதவிர கோவில்கள், மசூதிகளிலும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    இதேபோல கோவை புறநகரில் ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    இந்நிலையில் பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு இன்று பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளின் சார்பில் தடையை மீறி போராட்டங்கள் நடத்தப்பட இருக்கின்றன. இதனால் நகரில் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    Next Story
    ×