search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முக ஸ்டாலின்
    X
    முக ஸ்டாலின்

    கருணாநிதி அறக்கட்டளை சார்பில் 8 பேருக்கு ரூ.2 லட்சம் மருத்துவம்-கல்வி நிதி: மு.க.ஸ்டாலின் வழங்கினார்

    கடந்த நவம்பர் மாதத்திற்கு வட்டியாக கிடைத்த தொகையில் மருத்துவம் மற்றும் கல்வி உதவி நிதியாக மொத்தம் 8 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.2 லட்சத்தை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார்.

    சென்னை:

    கலைஞர் கருணாநிதி அறக்கட்டளையில் உள்ள நான்கு கோடி ரூபாயில் இருந்து வரும் வட்டித் தொகையில் மாதம் தோறும் ஏழை எளிய நலிந்தோருக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது.

    2005 நவம்பர் முதல் இதுவரை வழங்கிய நிதி ரூ. 5 கோடியே 41 லட்சத்து 90 ஆயிரம் ஆகும். மேலும் தற்போது வங்கியின் வட்டி விகிதம் குறைந்துள்ளதால் கடந்த நவம்பர் மாதத்திற்கு வட்டியாக கிடைத்த தொகையில் மருத்துவம் மற்றும் கல்வி உதவி நிதியாக மொத்தம் 8 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.2 லட்சத்தை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார்.
    Next Story
    ×