search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதிய குடிநீர் திட்டத்திற்காக கட்டப்பட்டுள்ள  மேல்நிலை  நீர்த்தேக்க தொட்டி.
    X
    புதிய குடிநீர் திட்டத்திற்காக கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி.

    அவினாசியில் புதிய கூட்டு குடிநீர் திட்டம்-அடுத்த மாதம் முதல் செயல்படுத்த ஆயத்தப்பணிகள் தீவிரம்

    அவினாசி பகுதியில் புரமோட்டர்கள் மூலம் அதிக அளவில் புதிய வீடுகளும் கட்டப்பட்டு நாளுக்கு நாள்குடியிருப்புகள் பெருகிக்கொண்டே வருகிறது.
    அவினாசி:

    திருப்பூர் மாவட்டம் அவினாசி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது, இங்குள்ள அனைத்து குடியிருப்புகள், வணிக வளாகங்கள், தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு பேரூராட்சி நிர்வாகத்தின் மூலம் குழாய் இணைப்பு வழங்கி மேட்டுப்பாளையத்திலிருந்து குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. கடந்த பல வருடங்களுக்கு முன்பு குடியிருப்புகள் எண்ணிக்கை குறைவாக இருந்ததால் 4, 5 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்பட்டது. 

    அவினாசிக்கு மிக அருகில் உள்ள திருப்பூர் மாநகரம், நியூ திருப்பூர் ஆகியவற்றில் ஆயிரக்கணக்கான பனியன் கம்பெனிகள் உள்ளது. இவைகளில் பீகார், ஒடிசா, மேற்குவங்கம், மகாராஸ்டிரா உள்ளிட்ட மாநிலம் மற்றும் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலிருந்தும் பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். 

    அவர்கள் அவினாசி பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்குவதாலும், அவினாசி பகுதியில் புரமோட்டர்கள் மூலம் அதிக அளவில் புதிய வீடுகளும் கட்டப்பட்டு நாளுக்கு நாள்குடியிருப்புகள் பெருகிக்கொண்டே வருகிறது. 

    இதனால் குடிநீரின் தேவையும் கணிசமாக கூடும் நிலை ஏற்பட்டுள்ளது. அவினாசி 18 வார்டுகளில் 8 ஆயிரம் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் பலர் குடிநீர் இணைப்பு கேட்டு தினசரி விண்ணப்பித்து வருகின்றனர். இந்தநிலையில் வீடுகளுக்கு 10, 12 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. 

    இதனால் குடிநீர் பற்றாக்குறையால் பொதுமக்கள் அடிக்கடி சாலைமறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். எனவே குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாணும் விதமாக ரூ.245 கோடி மதிப்பீட்டில் அவினாசி, அன்னூர், மோப்பிரிபாளையம், சூலூர் விமான நிலைய பகுதி திருப்பூர் ஊரகம் உள்ளிட்ட பகுதிகளுக்கு கூட்டு குடிநீர் திட்டம் கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 

    சிறுமுகை பவானி ஆற்றிலிருந்து புதிய குடிநீர் திட்டம் செயல்பட உள்ளது, இதற்காக அவினாசியில் வ.உ.சி.பூங்கா, காமராஜ்நகர், வாரச்சந்தை, சீனிவாசபுரம், ராயம்பாளையம் ஆகிய இடங்களில் மேல்நிலை தொட்டி கட்டப்பட்டுள்ளது. இவைகளில் நீர் நிரப்பி சோதனை நடத்தப்பட்டுள்ளது.

    இதுகுறித்து பேருராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில், 

    கூட்டு குடிநீர் திட்டப் பணிகள் 95 சதவிகிதம் நிறைவடைந்துள்ளது. இதன் மூலம் நபர் ஒன்றுக்கு 120 லிட்டர் வீதம் 3 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகிக்கப்படும். இந்த நடைமுறை வருகிற ஜனவரி மாதம் முதல் வாரத்தில் செயல்படுத்த ஆயத்தப்பணிகள் நடைபெற்று வருகிறது. 
    Next Story
    ×