என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  வானிலையின் தற்போதைய நிலவரப் படம்
  X
  வானிலையின் தற்போதைய நிலவரப் படம்

  தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழகத்தில் நாளை முதல் மழை குறைய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
  சென்னை:

  அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி தீவிரமடைந்து மண்டலமாக மாறி பின் ஜாவத் புயலாக உருமாறியது. இந்த புயல் வலுவடைந்து வடக்கு ஆந்திரா தெற்கு ஒடிசா இடையே கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது வலுவிழந்தது. இதனால், ஆந்திரா, ஒடிசா மாநில கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

  இதன் எதிரொலியால், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் நெல்லை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  இதேபோல், மேற்குதொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

  மேலும், மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும் 6 மணி நேரத்தில் வலுவிழக்கும் என்றும் வடமேற்கு வங்கக்கடல், மத்திய மேற்கு வங்கக்கடல், ஒடிசா கடலோர பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  இதையடுத்து, தமிழகத்தில் நாளை முதல் மழை குறைய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

  இதையும் படியுங்கள்.. சென்னையில் கடும் பனிப்பொழிவு- அதிகாலை நேரத்தில் வாகன ஓட்டிகள் திணறல்
  Next Story
  ×