search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூரில் இன்று ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்திக்கொண்ட பொதுமக்கள்.
    X
    திருப்பூரில் இன்று ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்திக்கொண்ட பொதுமக்கள்.

    திருப்பூரில் 13-ம்கட்ட கொரோனா தடுப்பூசி முகாம்

    இன்று 13ம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் 18 வயதை கடந்த 19 லட்சத்து 95 ஆயிரத்து 300 பேர் உள்ளனர். இவர்களில் 2 லட்சத்து 54 ஆயிரத்து 172 பேருக்கு முதல் தவணையும், 4 லட்சத்து, 85 ஆயிரத்து 081 பேருக்கு இரண்டாம் தவணையும் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டியது உள்ளது.

    இந்தநிலையில் இன்று 13ம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 604 மையம், 41 நடமாடும் முகாம்களில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. வழக்கமாக இரவு 7 மணி வரை மெகா தடுப்பூசி முகாம் நடக்கும்.இன்றைய முகாம் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும்  நடைபெற உள்ளது. மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த ஜனவரி மாதம் தொடங்கியது. 

    முதல் மூன்று முகாம்களில் இலக்கை தாண்டி (ஒரு லட்சத்துக்கும் அதிகமாக) தடுப்பூசி செலுத்தப்பட்டது. அடுத்தடுத்த முகாம்களில் சற்று சுணக்கம் ஏற்பட்டது. 

    கர்நாடகாவில் இருவருக்கு கொரோனாவின் அடுத்த நிலை என கருதப்படும் ‘ஒமைக்ரான்’ உறுதியாகியுள்ளது. இச்சூழலில் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி கொள்வது கட்டாயம் என அரசு அறிவித்துள்ளது. 

    இதனால் இன்று நடைபெற்ற முகாம்களில் தடுப்பூசி செலுத்த பலர் ஆர்வம் காட்டினர்.  
    Next Story
    ×