search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொசுவலைக்குள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்கள்.
    X
    கொசுவலைக்குள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்கள்.

    திருப்பூரில் மேலும் 11 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு- கொசுவலைக்குள் அமர்ந்து கவுன்சிலர்கள் போராட்டம்

    டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
    திருப்பூர்:

    திருப்பூர் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த மழை காரணமாக டெங்கு காய்ச்சல் பரவ தொடங்கியுள்ளது. குழந்தைகள் முதல் சிறுவர்கள் வரை தினமும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

    இந்தநிலையில் நேற்று மாவட்டத்தில் ஒரே நாளில் 11 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து 6 குழந்தைகள் உள்பட 11 பேரும் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள டெங்கு காய்ச்சல் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே அங்கு 12 பேர் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

    டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படும் நபர்களின் வீடுகளை சுற்றிலும் கொசு மருந்து அடித்தல், தெருக்களை சுத்தம் செய்தல், கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சுகாதாரத் துறை அதிகாரிகள் மேற் கொண்டு வருகின்றனர்.

    இந்தநிலையில் அவிநாசி அருகே வேலாயுதம்பாளையம் ஊராட்சியில் டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில் புகைமருந்து அடிக்க வலியுறுத்தி கவுன்சிலர்கள் சிலர் கொசுவலைக்குள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 
    Next Story
    ×