search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    மீன் பண்ணைகள் அமைக்க மானியம்

    பிரதமர் மீன் வள மேம்பாட்டு திட்டத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான குளங்கள், கல் குவாரிகளில் உள்ள தண்ணீரில், மிதவை கூண்டுகள் அமைத்து மீன் வளர்க்கலாம்.
    திருப்பூர்:

    மீன் வளர்ப்பவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தில் 40 சதவீத மானியத்தில் 1,000 ச.மீ., அளவில்  ஏற்கனவே அமைந்துள்ள மீன் குட்டைகளை மேம்படுத்தலாம். 

    ஒருங்கிணைந்த கூட்டு மீன் வளர்ப்பில் இந்திய பெருங்கெண்டை மீன்களுடன் நன்னீர் இறால் வளர்க்கலாம். அதற்காக 40 சதவீதம் அல்லது ரூ.25 ஆயிரம்  மானியம் வழங்கப்படும். பண்ணை குட்டைகளுக்கு பாலிதீன் உறையிடுதல்  மற்றும் மீன் வளர்த்திட ஆகும் உள்ளீட்டு செலவில் 40 சதவீத மானியம் வழங்கப்படும். அதிகபட்சமாக, ரூ.75 ஆயிரம் மானியமும், விறால் மீன் வளர்ப்பு செய்யும் உள்ளீட்டு செவினத்தில் 40 சதவீத மானியமும், அதிகபட்சமாக ரூ.30 ஆயிரம் வழங்கப்படும்.

    பிரதமர் மீன் வள மேம்பாட்டு திட்டத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான குளங்கள், கல்குவாரிகளில் உள்ள தண்ணீரில், மிதவை கூண்டுகள் அமைத்து மீன் வளர்க்கலாம். அதற்காக பொதுப்பிரிவினருக்கு 40 சதவீத மானியம் (அதிகபட்சமாக  ரூ.1.20 லட்சம்) வழங்கப்படும். 

    ஆதிதிராவிடர் மற்றும் மகளிருக்கு  60 சதவீத மானியம் ( ரூ.1.80 லட்சம்) வழங்கப்படும். மீன் வளர்ப்பு திட்டங்களில் ஏதாவது ஒன்றில் மீன் வளர்க்கும் விவசாயிகள் பயன்பெறலாம். மீன் வளர்ப்பு திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தாராபுரம் நல்லதங்காள் ஓடை அணை, கோனேரிப்பட்டியில் இயங்கி வரும், மீன்வள ஆய்வாளர் அலுவலகத்தை  93848 24520, 96291 91709 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம்.

    கூடுதல் விவரங்களுக்கு, ஈரோடு கலெக்டர் அலுவலகம் அருகே சுப்பராம் காம்பளக்சில் இயங்கும் மீன்வள ஆய்வாளர் அலுவலகத்தை 0424- 2221912 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம் என திருப்பூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. 
    Next Story
    ×