search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மழை
    X
    மழை

    விடிய விடிய கனமழை- நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

    நாமக்கல் மாவட்டத்தில் விடாமல் மழை பெய்ததால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. மாவட்டத்தில் அதிகபட்சமாக மோகனூரில் 94 மில்லி மீட்டர் பெய்துள்ளது.
    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் கடந்த மாதம் பரவலாக மழை பெய்தது. தொடர் மழையால் பல பகுதிகளில் ஏரிகள், குளங்கள், நீர் நிலைகள் நிரம்பின. சில இடங்களில் ஏரிகள் குறைந்த அளவு தண்ணீருடன் காட்சியளிக்கிறது. கடந்த 3 நாட்களாக மாவட்டத்தில் மழை இல்லாமல் வறண்ட வானிலை நிலவியது. இதனிடையே இன்று அதிகாலை மாவட்டம் முழுவதும் கன மழை கொட்டியது.

    தொடர்ந்து விடிய விடிய மழை பெய்தது. இந்த மழையால் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியது. காலையிலும் மழை பெய்ததால் அத்தியாவசிய பணிகள், மற்றும் அலுவலகங்கள், வேலைகளுக்கு செல்வோர் அவதிபட்டனர். விடாமல் மழை பெய்ததால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. மாவட்டத்தில் அதிகபட்சமாக மோகனூரில் 94 மில்லி மீட்டர் பெய்துள்ளது.

    திருச்செங்கோட்டில் 53 மி.மீ., ராசிபுரம் 48.30 மி.மீ., புதுச்சத்திரம் 38 மி.மீ., சேந்தமங்கலம் 19 மி.மீ., பரமத்திவேலூர் 15 மி.மீ., குமாரபாளையம் 11.40 மி.மீ., கலெக்டர் அலுவலக வளாகம் 1 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. செம்மேட்டில் மழை பெய்யவில்லை. மாவட்டத்தில் மொத்தம் 283.80 மிமீ மழையும், சராசரியாக 23.65 மி.மீ. மழையும் பெய்துள்ளன.

    Next Story
    ×