search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீடு தேடி கல்வி விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்ற போது எடுத்த படம்.
    X
    வீடு தேடி கல்வி விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்ற போது எடுத்த படம்.

    பல்லடம் அருகே வீடு தேடி கல்வி விழிப்புணர்வு

    பல்லடம் சப்-இன்ஸ்பெக்டர் பத்மநாபன், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் நடராஜன், அறம் அறக்கட்டளை தலைவர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    பல்லடம்:

    பல்லடம் அருகே கணபதிபாளையம் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு வீடு தேடி கல்வி திட்டம் குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. 

    பள்ளி கல்வித்துறை, திருப்பூர் மாவட்ட சமக்ர சிக்ஷா, வட்டார வள மையம் சார்பில்  நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கணபதிபாளையம் ஊராட்சி மன்றத்தலைவர் நாகேஸ்வரி தலைமை தாங்கினார். 

    இதில் பல்லடம் தி.மு.க. கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் சோமசுந்தரம், ஊராட்சி துணைத் தலைவர் முத்துக்குமார், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் சுதா, பல்லடம் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர் சாரதா, கிராம நிர்வாக அலுவலர்கள் முகமது மர்ஜீக் அலி, சுப்பிரமணி, வார்டு உறுப்பினர்கள் ரவிதண்டபாணி, கதிரேசன், பெற்றோர் ஆசிரியர் கழக பிரதிநிதி பாலசுப்பிரமணியம் மற்றும் பெற்றோர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    இதேப்போல் பல்லடம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பள்ளி தலைமையாசிரியர் புஷ்பலதா தலைமை வகித்தார். பல்லடம் சப்-இன்ஸ்பெக்டர் பத்மநாபன், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் நடராஜன், அறம் அறக்கட்டளை தலைவர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

    சமூக ஆர்வலர் சாகுல் அமீது வரவேற்றார். திருப்பூர் மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி பள்ளி மாணவர்களுக்கு போக்சோ சட்டம் குறித்து விளக்கிப் பேசினார். சிறுவயது திருமணம், அதனால் ஏற்படும் விளைவுகள், போதைப்பொருட்கள் குறித்த விழிப்புணர்வு உள்ளிட்டவைகள் குறித்து அவர் பேசினார். 

    கூட்டத்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். 
    Next Story
    ×