search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    ஆதிதிராவிடர் நல விடுதியில் மாணவர் சேர்க்கை

    நடப்பு கல்வியாண்டில் 6-ம்வகுப்பு முதல் கல்லூரி பயிலும் மாணவ, மாணவிகளுக்கான சேர்க்கை 8-ந்தேதி நடக்கிறது.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 19 இடங்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் விடுதிகள் இயங்கி வருகின்றன. கொரோனா ஊரடங்குக்கு பின்  செப்டம்பர் 1-ந்தேதி முதல் விடுதிகள் திறக்கப்பட்டு உள்ளன. 

    நடப்பு கல்வியாண்டில் 6-ம்வகுப்பு முதல் கல்லூரி பயிலும் மாணவ, மாணவிகளுக்கான சேர்க்கை 8-ந்தேதி நடக்கிறது. தகுதியான ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் இதர வகுப்பினர், விகிதா சார அடிப்படையில்தேர்வுக் குழுவினர் மூலம் தேர்வு செய்யப்படுவர். 

    ஒரு விடுதிக்கு தலா 5 பேர் வீதம், இலங்கை தமிழர் குழந்தைகளும் சேர்க்கப்படலாம். விடுதியில் தங்கி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு உணவு, உடை, தங்குமிடம், பாய், தலையணை, போர்வை, பாடப்புத்தகம், குறிப்பேடு, எழுது பொருட்கள் அரசால் இலவசமாக வழங்கப்படும்.  

    சாதிச்சான்று, வருமான சான்று, ஆதார் அட்டை , வங்கி கணக்கு புத்தக நகல் மற்றும் போட்டோவுடன் இணைத்து வருகிற 6-ந்தேதி மாலைக்குள் விடுதி காப்பாளரிடம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.  
    Next Story
    ×