search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    மின் கம்பிகளால் திருப்பூரில் நடைமேம்பால பணிகள் தாமதம்

    கடுமையான வாகன போக்குவரத்து நிறைந்த 3 ரோடுகளையும் கடந்து செல்வது என்பது பொதுமக்களுக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது.
    திருப்பூர்:

    திருப்பூர் குமரன் ரோட்டில் டவுன்ஹால் எதிரே பாதசாரிகள் பயன்படுத்தும் வகையில் நடை மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. குமரன் ரோடு, நேரு வீதி, ரெயில் நிலைய ரோடு ஆகிய ரோடுகளை கடந்து செல்லும் பாதசாரிகள் பயன்படுத்தும் வகையில் இது அமைக்கப்படுகிறது.

    கடுமையான வாகன போக்குவரத்து நிறைந்த இந்த 3 ரோடுகளையும் கடந்து செல்வது என்பது பொதுமக்களுக்கு மிகப் பெரிய சவாலாக உள்ளது. மேலும் வாகன ஓட்டிகளும் ரோட்டின் குறுக்கில் கடந்து செல்லும் பாதசாரிகளால் சில சமயங்களில் நிலை குலைந்து விபத்துகள் ஏற்படுவதும் சகஜமாக உள்ளது.

    இதற்கு தீர்வு காணும் வகையில் மாநகராட்சி சார்பில் குமரன் ரோடு, டவுன்ஹால் முன்புறம், விநாயகர் கோவில் முன்புறம் மற்றும் நேரு வீதி சந்திப்பு ஆகிய பகுதிகளில் இரும்பு தூண்கள் அமைக்கப்பட்டது.

    இதில் நேரு வீதி சந்திப்பு பகுதியில் இரும்பு தூண் மட்டும் அமைக்கப்பட்ட நிலையில் பணி நிறுத்தப்பட்டுள்ளது. பாலத்துக்கான படிக்கட்டு மற்றும் நடை மேடை அமைக்கும் பணி தொடராமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

    இதுகுறித்து மாநகராட்சி பொறியியல் பிரிவினர் கூறுகையில்:

    நேரு வீதி சந்திப்பு பகுதியில் நடை மேம்பாலம் அமையும் பகுதியில் உயர் அழுத்த மின்சாரம் செல்லும் மின் கம்பிகள் உள்ளன. அவற்றை அகற்றினால் மட்டுமே நடை மேம்பாலம் அமைக்கும் பணி தொடர்ந்து மேற்கொள்ள முடியும். இங்குள்ள மின் வயர்கள் புதை மின் வடங்களாக மாற்றியமைக்கப்பட வேண்டும். 

    இதற்கான தொகை மின் வாரியத்துக்கு செலுத்தப்பட்டு விட்டது. மின் வாரியத்தினர் பணி மேற்கொண்டு மின் கம்பிகள் மாற்றியமைத்த பின்னரே நடைமேம்பாலம் அமைத்து முடிக்கப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
    Next Story
    ×