search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    பட்டுக்கூடு விலை உயர்வு - விவசாயிகள் மகிழ்ச்சி

    சமீபத்திய ஆண்டுகளில் இந்தியா சீனாவிலிருந்து பட்டு இறக்குமதிக்கு கடிவாளம் போட்டது.
    திருப்பூர்:

    இந்தியாவை விட சீனாவில் பட்டு உற்பத்தி நல்ல வளர்ச்சி அடைந்துள்ளது. பல ஆண்டுகளாக இந்தியாவில் சீனா பட்டு ஆதிக்கம் அதிகமாக இருந்தது. இந்தியாவை விட சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பட்டு நூல், துணி விலை குறைவாக இருந்தது. 

    இதனால் இந்திய வர்த்தகர்கள் அதிக அளவில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்தனர். இந்திய விவசாயிகள் சீன நாட்டுடன் போட்டி போட முடியாமல் நஷ்டத்தை சந்தித்தனர். சமீபத்திய ஆண்டுகளில் இந்தியா சீனாவிலிருந்து பட்டு இறக்குமதிக்கு கடிவாளம் போட்டது. 

    மேலும் வர்த்தகர்களும் சீனாவில் இருந்து இறக்குமதி செய்வதை விரும்பவில்லை. இது இந்திய பட்டு விவசாயிகளுக்கு பிரகாசமான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பருவமழை காலங்களில் விவசாயிகள் சாகுபடி பணியில் ஈடுபடுவர். எனவே வருமானம் குறைவாக இருக்கும். மழை காரணமாக பட்டின் தேவை குறைவாக இருக்கும். இதனால், குளிர் காலத்தில் பட்டு கூடு விலை சரிவது வழக்கம்.

    ஆனால் இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக தற்போது பட்டுக் கூடுகளுக்கு நல்ல விலை கிடைக்கிறது. ஒரு கிலோ பட்டுக்கூடு ரூ. 550க்கு விலை போகிறது. போதிய விலை கிடைப்பதால் பட்டு கூடு உற்பத்தியில் ஈடுபட்டுள்ள உடுமலை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இந்தியாவுக்கும் சீனாவுக்கும் நல்லுறவு இருந்தால் பட்டுக் கூடு விலை இந்த சீசனில் ரூ.300ஐ தாண்டுவதே சிரமம். தற்போது இந்திய பட்டு விவசாயிகளுக்கு பொற்காலமாக அமைந்துள்ளது. 

    இதுகுறித்து பட்டு வளர்ச்சித்துறையினர் கூறுகையில்:

    சீன பட்டுக்கு மத்திய அரசு தடை விதித்ததால் நல்ல விலை கிடைக்கிறது. கோடை காலத்தில் பட்டுக்கூடுகளுக்கு தேவை அதிகரிக்கும். இதனால் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. சீனா இறக்குமதி தடையால் பட்டு விவசாயிகளுக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது’ என்றனர். 
    Next Story
    ×