search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிவாடியில் விவசாயிகள் மாடுகளுடன் வந்து முற்றுகை போராட்டம் நடத்திய போது எடுத்த படம்
    X
    சிவாடியில் விவசாயிகள் மாடுகளுடன் வந்து முற்றுகை போராட்டம் நடத்திய போது எடுத்த படம்

    தருமபுரி அருகே, ரெயில்வே மேம்பாலம் கட்டித் தரக்கோரி மாடுகளுடன் வந்து விவசாயிகள் போராட்டம்

    ரெயில்வே மேம்பாலம் கட்டித் தரக்கோரி இன்று காலையில் மாடுகளுடன் வந்து பொதுமக்கள், விவசாயிகள் திரண்டு வந்து போராட்டம் நடத்தியதால் சிவாடி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    தொப்பூர்:

    தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த சிவாடி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் எச்.பி.சி.எல் நிறுவனம் சுமார் 1,100 கோடி ரூபாய் செலவில் தொடங்கப்பட்டுள்ளது. 

    இதற்காக நிறுவனத்திற்கு தனியாக ரெயில் பாதை அமைக்கப்பட உள்ளது. அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

    அதேபோல் சிவாடி கிராம பொதுமக்கள் ரெயில்வே கேட்டைக் கடந்து செல்வதற்காக ரெயில் நிலையம் அருகிலேயே ரெயில் சுரங்கப்பாதையும் அமைக்கப்பட்டுள்ளது. 

    அதன் அருகில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்த ரெயில்வே கேட் மூடப்பட்டு அதன் வழியாக தனியார் நிறுவனத்திற்கு ரெயில் பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இதனால் ரெயில்பாதையில் அருகிலுள்ள கிராம பொதுமக்களுக்கு தேவையான சுமார் 500-க்கும் மேற்பட்ட விவசாய நிலங்களில் உழவு செய்வதற்கு பயிர் செய்யப்பட்ட தானியங்கள் சந்தைப்படுத்துவதற்கு கொண்டு செல்வதற்கும் வழியில்லாமல் தவித்து வந்தனர். இதனால் ரெயில் நிலையம் பகுதியில் மேம்பாலம் அமைத்து கொடுக்க வேண்டும் இல்லைவிட்டால் ரெயில் பாதை அமைக்க விடமாட்டோம் என கூறி சிவாடி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் மாடுகளுடன் வந்து முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் தொப்பூர் இன்ஸ்பெக்டர் ரங்கசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். இதுபற்றி அதிகாரிகளுடன் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர். இருப்பினும் விவசாயிகளும், பொதுமக்களும் அங்கிருந்து செல்லாமல் இருந்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் தொடர்ந்து அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    Next Story
    ×