search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    தாராபுரம் தனியார் பள்ளியில் 27 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு - பெற்றோர், அதிகாரிகள் அதிர்ச்சி

    சுகாதாரத்துறை அதிகாரிகள் பள்ளிகளுக்கு சென்று ஆய்வு பணியில் ஈடுபட உள்ளனர்.
    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் - கரூர் மெயின் ரோட்டில் தனியார் பள்ளி உள்ளது. இங்கு படிக்கும் மாணவர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பள்ளி மாணவர்கள் அனைவரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். 

    இதில் 27 மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் 3 ஊழியர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பள்ளிக்கு 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

    27 மாணவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டது திருப்பூர் மாவட்ட சுகாதார அதிகாரிகள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் பள்ளியில் முகாமிட்டு தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.  

    வகுப்பறைகளில் கிருமிநாசினி தெளிப்பது மற்றும் பள்ளி அமைந்துள்ள பகுதியில் தூய்மைப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதி கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    27மாணவர்கள் பாதிக்கப்பட்டதையடுத்து திருப்பூர் மாவட்டம் முழுவதும் பள்ளிகளில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. சுகாதாரத்துறை அதிகாரிகள் பள்ளிகளுக்கு சென்று ஆய்வு பணியில் ஈடுபட உள்ளனர்.

    திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைந்தும், அதிகரித்தும் வருகிறது. நேற்று  மாவட்டத்தில் 57 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 97 ஆயிரத்து 230 ஆக உயர்ந்துள்ளது. 

    மேலும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 57 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 95 ஆயிரத்து 621 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 609 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு நேற்று ஒருவர் பலியானார். இதனால் கொரோனா பலி எண்ணிக்கை ஆயிரமாக உயர்ந்துள்ளது. 
    Next Story
    ×