search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விபத்தில் சேதமடைந்த ஆட்டோவையும், கவிழ்ந்த சரக்கு வேனையும் படத்தில் காணலாம்.
    X
    விபத்தில் சேதமடைந்த ஆட்டோவையும், கவிழ்ந்த சரக்கு வேனையும் படத்தில் காணலாம்.

    பல்லடம் அருகே ஆட்டோ மீது சரக்கு வேன் மோதி பெண் உள்பட 4 பேர் படுகாயம்

    ஆறுமுகம் அவரது மகள் வள்ளி அவருடைய கணவர் ராஜா மற்றும் ஆட்டோ ஓட்டுனர் அருணாச்சலம் ஆகிய 4 பேரும் படுகாயங்களுடன் உயிருக்குப் போராடிய நிலையில் இருந்தனர்.
    திருப்பூர்:

    கோவை ஆர்.எஸ் புரத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது65). தனது மகள் வள்ளி(35), அவரது கணவர் ராஜா (38) ஆகியோருடன் அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் அருணாச்சலம் (52) என்பவரது ஆட்டோவில் பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டை பகுதியில் உறவினர் இறந்த துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்துள்ளனர். 

    அவர்கள் வந்த பயணியர் ஆட்டோ காரணம்பேட்டையை கடந்தபோது பல்லடத்தில் இருந்து கோவை நோக்கி சென்ற சரக்கு வேன் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. 

    இந்த விபத்தில் ஆட்டோவில் பயணித்த ஆறுமுகம் அவரது மகள் வள்ளி அவருடைய கணவர் ராஜா மற்றும் ஆட்டோ ஓட்டுனர் அருணாச்சலம் ஆகிய 4 பேரும் படுகாயங்களுடன் உயிருக்குப் போராடிய நிலையில் இருந்தனர். 

    இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பல்லடம் போலீசார் படுகாயமடைந்த நால்வரையும் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் உதவியுடன் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 

    அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்த மருத்துவர்கள் பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்தை ஏற்படுத்திய சரக்கு வேன் ஓட்டுனர் தலைமறைவாகி விட்ட நிலையில் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    Next Story
    ×