search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜெயக்குமார்
    X
    ஜெயக்குமார்

    அ.தி.மு.க.வில் 5 ஆண்டுகள் உறுப்பினராக இருப்பவர்களே அடிப்படை உறுப்பினர்கள்- ஜெயக்குமார் விளக்கம்

    அ.தி.மு.க.வில் இருந்து அன்வர் ராஜாவை நீக்கியது சரியான நடவடிக்கை தான் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
    சென்னை:

    அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரை அடிப்படை உறுப்பினர்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்று சட்ட விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி யார் யார் அடிப்படை உறுப்பினர்கள் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமாரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு ஜெயக்குமார் கூறியதாவது:-

    அ.தி.மு.க.வில் 5 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் தொடர்ந்து உறுப்பினராக இருப்பவர்களே அடிப்படை உறுப்பினர்களாக கருதப்படுவார்கள். அவர்கள் தான் ஓட்டுபோட்டு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரை தேர்வு செய்வார்கள்.

    அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரை அடிப்படை உறுப்பினர்கள் ஒற்றை வாக்கின் மூலம் இணைந்தே தேர்வு செய்வார்கள் என்று ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதற்கு செயற்குழு உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்ததன் அடிப்படையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    அன்வர் ராஜா

    அ.தி.மு.க.வில் இருந்து அன்வர் ராஜாவை நீக்கியது சரியான நடவடிக்கை தான். சரியான நேரத்தில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தாவிட்டால் ஆள் ஆளுக்கு பேசத்தொடங்கி விடுவார்கள். அந்த வகையில் தான் அவர் நீக்கப்பட்டுள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.


    Next Story
    ×