search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருமாவளவன்
    X
    திருமாவளவன்

    நாற்காலி மீது நடந்து சென்றது குறித்து திருமாவளவன் விளக்கம்

    எனது தொண்டர்களை அவமரியாதை செய்யும் குணம் என்னிடம் கிடையாது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.

    சென்னை:

    விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் சென்னை வேளச்சேரியில் உள்ள கட்சி அலுவலகத்தில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.

    அப்போது கட்சி அலுவலகத்தில் மழை வெள்ளம் சூழ்ந்து இருந்ததால் அவரால் தண்ணீரில் நடந்து வந்து காரில் ஏற முடியவில்லை. அவரது தொண்டர்கள் அவரை 

    தூக்கி சென்று காரில் அமர்த்த நினைத்தார்கள். அதை மறுத்த திருமாவளவன் தான் நடந்து வருவதாகவே கூறினார்.

    கழிவுநீர் கலந்த மழை நீரில் கால் நனையாதபடி இருக்க நாற்காலிகளை அவரது தொண்டர்கள் பயன்படுத்தினார்கள். படிக்கட்டில் இருந்து அவரை நாற்காலி மூலமாக காருக்குள் அழைத்து சென்றனர்.

    நாற்காலி மீது நடந்து சென்ற காட்சி

    அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. சமூக வலைதளங்களில் அவரை பற்றி பல்வேறு கருத்துக்களை வெளியிட்டனர். தொண்டர்களை திருமாவளவன் அவமதித்தாக செய்திகள் பரவியது.

    இதனை தொல்.திருமாவளவன் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    எனக்கு சொந்த வீடு இல்லை. எனது அலுவலகத்தில் உள்ள அறையில் இருந்து காரில் ஏற வரும்போது தொண்டர்கள் என்னை நாற்காலிகள் மூலமாக தாங்கி அழைத்து சென்றனர்.

    பாராளுமன்ற கூட்டத்தில் பங்கேற்பதற்காக நான் டெல்லி புறப்பட்டேன். அவசரமாக விமானத்தை பிடிக்க வேண்டிய சூழ்நிலை இருந்ததால் கழிவுநீர் கலந்த மழை வெள்ளத்தில் நடந்து செல்லவில்லை.

    நான் மழை நீரில் நடந்து செல்ல தயக்கம் காட்டவில்லை. ஆனால் உடனடியாக விமானத்தில் செல்ல வேண்டியது இருந்ததால் நான் அணிந்திருந்த ஷூ வெள்ளத்தில் நனைந்தால் மாற்ற முடியாத நிலை இருந்தது. இதனால் நாற்காலியை பயன்படுத்தி நான் கீழே விழுதாபடி தாங்கி பிடித்து எனது தொண்டர்கள் காருக்குள் அழைத்து சென்றனர். தொண்டர்களுடன் நான் குடும்பமாக பழகுபவன்.

    என்னை பற்றிமற்றவர்கள் விமர்சனம் செய்வதற்கு எதுவும் கிடைக்கவில்லை. அரசியல் லாபத்துக்காக இத்தகைய விமர்சனங்களை செய்கிறார்கள்.

    தொண்டர்களை மதிக்கும் இயல்புடையவன் நான். அவமரியாதை செய்யும் குணம் என்னிடம் கிடையாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையும் படியுங்கள்...தென் ஆப்பிரிக்காவில் இருந்து மும்பை வந்த 6 பேருக்கு கொரோனா

    Next Story
    ×