search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    டிசம்பர் 6ந் தேதி போராட்டத்திற்கு அனுமதி வழங்க கூடாது - டி.ஜி.பி.க்கு மனு

    காவல் துறையினரை தேவையற்ற பதற்றத்தில் ஆழ்த்துவதுடன் அவர்களுக்கு பணிச்சுமையும் அதிகரிக்கலாம்.
    திருப்பூர்:

    சிவசேனா இளைஞரணி மாநில தலைவர் அட்சயா திருமுருக தினேஷ் தமிழக போலீஸ் டி.ஜி.பி., நீதிபதிகள், திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் உள்ளிட்டோருக்கு ஒரு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார் .

    அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:

    ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 6-ந்தேதி நடத்தும் போராட்டத்தால் பதற்றம் பரவுவதைத் தடுத்து நிறுத்துமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில் இந்த நெறிமுறையற்ற போராட்டம் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை உருவாக்கும். மேலும் இந்த போராட்டத்தின் நோக்கமும் பேரழிவை ஏற்படுத்தும்.  

    காவல்துறையினரை தேவையற்ற பதற்றத்தில் ஆழ்த்துவதுடன் அவர்களுக்கு பணிச்சுமையும் அதிகரிக்கலாம். இந்த மழைக்காலங்களில் நிலைமையை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கு ஏற்கனவே போலீசார் இரவு பகலாக உழைத்து வருகின்றனர்.

    இதுமட்டுமின்றி கொரோனா ஓமிக்ரானின் புதிய மாறுபாடு மிக வேகமாக பரவி வருகிறது. இதுபோன்ற போராட்டத்திற்கு மக்கள் திரள்வது ஒட்டுமொத்த சமுதாயத்தையும் ஆபத்தில் ஆழ்த்தலாம். உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பே இறுதியானது. எனவே போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×