search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வானிலையின் தற்போதைய நிலவரப் படம்
    X
    வானிலையின் தற்போதைய நிலவரப் படம்

    தெற்கு அந்தமானில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது: புயலாக வலுப்பெற வாய்ப்பு

    தெற்கு அந்தமான் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவடைந்து புயலாக மாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    சென்னை:

    வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால், அடுத்தடுத்து புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி வருகிறது. இதன் எதிரொலியால், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

    இதைதொடர்ந்து, தெற்கு அந்தமான் மற்றும் மத்திய கிழக்கு அரபிக் கடலில் நாளை ஒரே நாளில் இரண்டு புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக  இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

    அதன்படி, இன்று காலை தெற்கு அந்தமான் கடலில் இன்னும் 12 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

    இந்நிலையில், தற்போது தெற்கு அந்தமானில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறி பின் மண்டலமாக வலுப்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பிறகு, காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று வடக்கு ஆந்திரா, தெற்கு ஒடிசாவை நோக்கி நகரும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதையும் படியுங்கள்.. மழை வெள்ளத்தில் இருந்து மக்களை காப்பதில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது- திருமாவளவன் பாராட்டு
    Next Story
    ×