search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    பல்லடம் சார்நிலை கருவூலத்தில் திருட முயன்ற வாலிபர்கள் 2 பேர் கைது - திட்டம் தீட்டி கொடுத்த போலீஸ்காரர் சஸ்பெண்டு

    அரசு சார்நிலை கருவூலத்தில் கொள்ளையடிக்க கொள்ளையர்களுக்கு போலீஸ்காரர் ஒருவரே திட்டம் தீட்டி கொடுத்து இருப்பது போலீசார் மத்தி யில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    மங்கலம்:
     
    திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் சார்நிலை கருவூலம் உள்ளது. இந்த கருவூலத்திற்கு கடந்த 8-ந் தேதி காலை வழக்கம் போல் அலுவலர்கள் பணிக்கு வந்தனர். அப்போது சார் நிலை கருவூல அலுவலக கதவின் பூட்டு உடைக்கப் பட்டு, கதவு திறந்து கிடந் தது.

    அதிர்ச்சியடைந்த அலு வலர்கள் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அங்குள்ள லாக்கரில் உள்ள பூட்டும் சேதப்படுத்தப்பட்டு இருந்தது.

    இதுகுறித்து சார்நிலை கருவூல அதிகாரி மீனாட்சி சுந்தரம் பல்லடம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் சார்நிலை கருவூலம் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். 

    மேலும் அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் மர்மநபர்களின் உருவம் பதிவாகி உள்ளதா? என்று ஆய்வு செய்தனர். அப்போது மர்மநபர்கள் லாக்கரின் பூட்டை உடைக்க முயன்றும், உடைக்க முடியாததால் பணம் தப்பியதும் தெரியவந்தது. 

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சார்நிலை கருவூலத்தில் திருட முயன்றதாக சேலத்தை சேர்ந்த பூபாலன் (33), செந்தில் குமார் உள்பட 2 பேரை பிடித்து விசாரித்தனர்.  

    விசாரணையில் 2 பேரும் சார்நிலை கருவூலத்தில் திருட முயன்றதும், மங்கலம் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வந்த ரவிச்சந்திரன் (38) என்பவரின் திட்டத்தின் பேரில் திருட முயன்றதாகவும் தெரிவித்தனர். 

    இதையடுத்து ரவிச்சந்திரன் வேலைக்கு செல்லாமல் தலைமறைவானார். இதையடுத்து அவரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய் உத்தரவிட்டார்.  

    அரசு சார்நிலை கருவூலத்தில் கொள்ளையடிக்க கொள்ளையர்களுக்கு போலீஸ்காரர் ஒருவரே திட்டம் தீட்டி கொடுத்து இருப்பது போலீசார் மத்தி யில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
    Next Story
    ×