search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உடுமலையில் குளம் போல் தேங்கி கிடக்கும் மழைநீர்.
    X
    உடுமலையில் குளம் போல் தேங்கி கிடக்கும் மழைநீர்.

    உடுமலையில் குளம் போல் தேங்கி கிடக்கும் மழைநீர்

    உடுமலை கிளை சிறையின் அருகே தண்ணீர் வெளியேறுவதற்கு வழியில்லாமல் குளம் போல் தேங்கி உள்ளது.
    உடுமலை:

    வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததை முன்னிட்டு உடுமலை சுற்றுப்புற பகுதியில் கடந்த சில நாட்களாக குறிப்பிட்ட இடைவெளியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நீர் வழித்தடங்கள், ஓடைகள் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்து வருகிறது.

    அந்த வகையில் கடந்த இரண்டு நாட்களாக இரவு வேளையில் உடுமலை பகுதியில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக ஆங்காங்கே தண்ணீர் தேங்கி வருகிறது. அந்த வகையில் உடுமலை கிளை சிறையின் அருகே தண்ணீர் வெளியேறுவதற்கு வழியில்லாமல் குளம் போல் தேங்கி உள்ளது. 

    அந்த தண்ணீரை அப்புறப்படுத்துவதற்கு அதிகாரிகள் முன்வரவில்லை. இதனால் அலுவலக பணியாளர்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு முடியாமல் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். அத்துடன் தேங்கியுள்ள தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியும் அதிகரித்துள்ளது. 

    அவை கிளை சிறையில் உள்ள கைதிகளை பதம் பார்த்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் கைதிகள் தொற்று நோய்களுக்கு ஆளாகும் சூழலுக்கு தள்ளப்பட்டு உள்ளனர். 

    எனவே தாலுகா அலுவலக வளாகத்தில் கிளைச்சிறையின் அருகே தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் தண்ணீர் தேங்காதவாறு அந்த பகுதியில் கிராவல் மண் கொட்டி மேடாக்குவதற்கு முன்வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×