search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தக்காளி
    X
    தக்காளி

    மதுரை உழவர் சந்தைகளில் தக்காளி ரூ.85-க்கு விற்பனை

    மதுரை மார்க்கெட்டில் காய்கறிகள் விலை சற்று குறைந்துள்ளது. இன்று ஒரு கிலோ தக்காளி 85 ரூபாய்க்கு உழவர் சந்தைகளில் விற்கப்பட்ட நிலையில் வெளி மார்க்கெட்டுகளில் 95 ரூபாய் வரை விற்பனையானது.
    மதுரை:

    தமிழகத்தில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக தக்காளி, கத்தரிக்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலைகள் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

    மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வரத்து கணிசமான அளவு குறைந்துள்ளதால் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ள நிலையில் தக்காளி மற்றும் கத்தரிக்காய் விலை கட்டுக்குள் கொண்டு வர தமிழக அரசு துரித நடவடிக்கை எடுத்தது.

    இந்த நிலையில் நேற்று மதுரை மார்க்கெட்டுகளில் 120 ரூபாய் வரை விற்கப்பட்ட தக்காளி மற்றும் கத்தரிக்காய் இன்று விலை குறைய தொடங்கியுள்ளன.

    மதுரையில் உள்ள பீ.பி.குளம் அண்ணாநகர், பழங்காநத்தம் உழவர் சந்தைகளில் தக்காளி கிலோ 85 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

    மேலும் கத்தரிக்காய் 60 ரூபாய்க்கும், இஞ்சி 40 ரூபாய்க்கும், பல்லாரி 40 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் 45 ரூபாய்க்கும், விற்பனை செய்யப்பட்டன.

    இதர காய்கறிகளின் விலையும் சற்று குறைந்து காணப்பட்டதால் பொது மக்கள் காய்கறிகளை வாங்க ஆர்வம் காட்டினர். சமையலுக்கு பயன்படுத்தப்படும் மல்லி இலை கிலோ 100 ரூபாய்க்கு விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    வெளிமார்க்கெட்டில் நேற்று 120 ரூபாய் வரை விற்கப்பட்ட தக்காளி இன்று 95 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. கத்தரிக்காய் 80 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டன. மார்க்கெட்டுகளில் தக்காளி மற்றும் கத்தரிக்காய் விலை குறையத் தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் தயக்கத்தை தவிர்த்து அதிக அளவில் காய்கறிகளை வாங்கினர்.
    Next Story
    ×