search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    உடுமலை நகராட்சியில் உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

    வார்டுவாரியாக வாக்காளர் பட்டியல் தெரியவந்துள்ளதால் போட்டியிட விரும்புபவர்கள் வாக்காளர்களை கவரும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    உடுமலை:

    மாநில தேர்தல் ஆணையம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்காக ஆயத்த பணிகளில் ஈடுபட்டுள்ளது. உடுமலை நகராட்சியில் வாக்காளர் பட்டியல் தயாரிப்பு, ஓட்டுச்சாவடிகள் மற்றும் ஓட்டுப்பதிவு எந்திரங்கள் தயார் செய்தல் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

    உடுமலை நகராட்சியில் 27 ஆயிரத்து, 901 ஆண்கள், 29 ஆயிரத்து 573 பெண்கள் மற்றும் 8 திருநங்கைகள் என 57 ஆயிரத்து 482 வாக்காளர்கள் உள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிகள் தீவிரமடைந்துள்ளன. வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. 

    ஓட்டுச்சாவடி, ஓட்டுப்பதிவு எந்திரங்களும் தயார் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் கமிஷன் அறிவித்ததும் பணிகள் தொடங்குவதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளன என்றனர்.

    வார்டு வாரியாக வாக்காளர் பட்டியல் தெரியவந்துள்ளதால் போட்டியிட  விரும்புபவர்கள் வாக்காளர்களை கவரும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சில வார்டுகளில் அடிப்படை பிரச்சினைகளை பட்டியலிட்டு அவற்றுக்கு தீர்வு ஏற்படுத்தி வாக்காளர்களை கவர அறிவிக்கப்படாத வேட்பாளர்கள் வீதி, வீதியாக வலம் வர தொடங்கியுள்ளனர். 

    உடுமலை நகராட்சி வார்டுகளில் வாக்காளர்கள் விபரம் வருமாறு:-
    1வது வார்டு - 1,733, 2 - 1,484, 3 - 1,526, 4 - 1,992, 5 - 1,195, 6 - 1,187, 7 - 1,369, 8 - 1,835, 9 - 1,431, 10 - 1,602.11 - 2,011, 12 - 2,500, 13 - 1,433, 14 - 905, 15 - அதிகபட்சமாக 3,437 பேர் .16 - 1,473, 17 - 2,041, 18 - 1,993, 19 - 1,069, 20 - 2.104, 21 - 3,257, 22 - 1,377, 23 - 1,965, 24 - 1,881, 25 - 1,187, 26 - 1,564, 27 -1,404, 28 -1,698; 29 - 1,535; 30 -1,455, 31 - 2,736, 32 - 2,208; 33 - 811 பேர் வாக்காளர்களாக உள்ளனர்.

    இதில் அதிக வாக்காளர்கள் இடம் பெற்றுள்ள வார்டாக 15-வது வார்டும், குறைந்த வாக்காளர்கள் உள்ள வார்டாக 33வது வார்டும் உள்ளது. அதேபோல் 13-வது வார்டில் ஆண்கள் 726 பேர், பெண்கள் 707 பேரும், 33வது வார்டில், 407 ஆண்கள், 404 பெண்கள் என இரண்டு வார்டுகளில் மட்டுமே பெண்களை விட ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கை கூடுதலாக உள்ளது. மற்ற 31 வார்டுகளிலும் ஆண்களை விட பெண்ளே அதிகம் இடம் பெற்றுள்ளனர். 
    Next Story
    ×