search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தம் செய்ய உடுமலை - மடத்துக்குளம் தொகுதியில் 6,392 பேர் விண்ணப்பம்

    உடுமலை தொகுதியில் 294 ஓட்டுச்சாவடிகள் அமைந்துள்ள 125 மையங்களில் சிறப்பு முகாம் நடந்தது.
    உடுமலை:

    தேர்தல் கமிஷன் 2022 ஜனவரி 1-ந்தேதியை தகுதி நாளாகக்கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு முறை சுருக்க திருத்தம் கொள்ள கடந்த 1-ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. வரும் 30ம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் மேற்கொள்ள, கடந்த 13, 14 மற்றும் 20, 21-ந் தேதிகளில் ஓட்டுச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் நடந்தது.

    உடுமலை தொகுதியில் 294 ஓட்டுச்சாவடிகள் அமைந்துள்ள 125 மையங்களில் சிறப்பு முகாம் நடந்தது. 4 முகாம்களிலும் 2,712 பேர் புதிய வாக்காளர்களாக இணைய விண்ணப்பித்துள்ளனர். 

    513 நீக்கல் விண்ணப்பங்களும், முகவரி மாற்றம், போட்டோ மாற்றம் உள்ளிட்ட திருத்தம் மேற்கொள்ள 410 விண்ணப்பங்களும், ஒரே தொகுதியில் முகவரி மாற்றம் செய்ய 267 விண்ணப்பங்கள் என 3,902 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

    மடத்துக்குளம் தொகுதியிலுள்ள 287 ஓட்டுச்சாவடிகளுக்கு 117 மையங்களில் சிறப்பு முகாம்கள் நடந்தன. இம்முகாம்களில் 1,818 பேர் புதிய வாக்காளர்களாக இணையவும், நீக்கம் செய்ய 258, திருத்தம் மேற்கொள்ள 308, ஒரே தொகுதியில் முகவரி மாற்றத்திற்கு 106 விண்ணப்பங்கள் என 2,490 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

    தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில்: 

    வாக்காளர் பட்டியல் சேர்த்தல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ள 30-ந்தேதி வரை இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். வரும் 27, 28-ந் தேதி ஓட்டுச்சாவடி மையங்களில் நடக்கும் சிறப்பு முகாம்களிலும் விண்ணப்பிக்கலாம் என்றனர்.
    Next Story
    ×