search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை
    X
    மழை

    கூத்தாநல்லூர் பகுதிகளில் 2 மணிநேரம் பலத்த மழை

    நீடாமங்கலம் பகுதியில் பலத்த மழை பெய்ததால் தாழ்வான பகுதிகளிலும், சாலைகளிலும் மழைநீர் தேங்கி நின்றது.
    கூத்தாநல்லூர்:

    கூத்தாநல்லூர் பகுதிகளில் நேற்று காலை வெயில் அடித்தது. அவ்வப்போது வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. திடீரென மதியம் இடி, மின்னலுடன் பலத்த காற்று வீசியது. அப்போது லேசான தூறலுடன் தொடங்கிய மழை கூத்தாநல்லூர், லெட்சுமாங்குடி, பொதக்குடி, பூதமங்கலம், தண்ணீர்குன்னம், வடபாதிமங்கலம், ஓகைப்பேரையூர், ராமநாதபுரம், திருராமேஸ்வரம், கோரையாறு, ஓவர்ச்சேரி, குடிதாங்கிச்சேரி, குலமாணிக்கம், நாகங்குடி, பழையனூர், அதங்குடி, வெள்ளக்குடி, வாழச்சேரி, மரக்கடை, விழல்கோட்டகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த மழையாக பெய்தது. இந்த மழை 2 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது.

    இதேபோல் நீடாமங்கலம் பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளிலும், சாலைகளிலும் மழைநீர் தேங்கி நின்றது.
    Next Story
    ×