search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    டெல்லியில் அறிவியல் ஆசிரியர்களுக்கான மாநாடு-கட்டுரைகளை இணையதளம் மூலம் பதிவு செய்யலாம்

    மாநாட்டில் விஞ்ஞானிகளின் பங்கு, கல்வி நிறுவனங்களின் இயக்கம், கொள்கை, திட்டமிடல் ஆகியவை விவாதிக்கப்படவுள்ளது.
    உடுமலை:

    மத்திய அரசின் சி.எஸ்.ஐ.ஆர்.,- நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் கம்யூனிகேஷன் சார்பில் தேசிய அளவிலான மாநாடு நடத்தப்படுகிறது. 

    அதாவது டெல்லி தேசிய இயற்பியல் ஆய்வகத்தில், ‘இந்திய சுதந்திர இயக்கம் மற்றும் அறிவியலின் பங்கு’ என்ற தலைப்பில், வரும், 29, 30 ஆகிய தேதிகளில் இம்மாநாடு நடக்கிறது. இதில் அறிவியல் பரப்புரை மேற்கொள்ளும் தன்னார்வலர்கள் மற்றும் அறிவியல் ஆசிரியர்கள் கலந்து கொள்கின்றனர்.

    இந்நிகழ்வு  ஆன்லைன் வாயிலாகவும் நடத்தப்பட உள்ளதால் பல்வேறு நாடுகளைச்சேர்ந்த விஞ்ஞானிகள், கருத்தாளர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்க உள்ளனர். அதன்படி 6 அமர்வுகளை உள்ளடக்கி மாநாடு நடத்தப்படவுள்ளது. அதில்  விஞ்ஞானிகளின் பங்கு, கல்வி நிறுவனங்களின் இயக்கம், கொள்கை, திட்டமிடல் ஆகியவை விவாதிக்கப்படவுள்ளது. 

    இம்மாநாட்டின் தலைப்புகளில் கட்டுரைகள், சுவரொட்டிகள், கவிதைகள், ஆவணப்படங்கள், குறும்படங்கள் ஆகியவற்றை http://swavigyan75.in என்ற இணையதளத்தைப்பயன்படுத்தி, பதிவு செய்து கொள்ளலாம். இதற்கு வரும் 27 -ந்தேதி கடைசி நாளாகும். 

    மேலும் விவரங்களுக்கு கலிலியோ அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளரை  -8778201926 தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 
    Next Story
    ×