search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாக்காளர் பட்டியல்
    X
    வாக்காளர் பட்டியல்

    வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க 6.14 லட்சம் பேர் மனு

    வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம், ஆட்சேபனை தெரிவிப்பது ஆகியவற்றுக்கு மட்டும் 1 லட்சத்து 518 பேர் மனு அளித்துள்ளனர்.
    சென்னை:

    தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம் மற்றும் திருத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த 1-ந்தேதி முதல் இந்த பணிகள் தொடங்கியது.

    இதையொட்டி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்வது, திருத்தம் மேற்கொள்வது போன்ற பணிகளுக்கு பொதுமக்கள் விண்ணப்பம் அளித்து வருகிறார்கள். இந்த விண்ணப்பங்கள் வட்டாட்சியர் அலுவலகங்கள், சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் பெறப்பட்டு வருகின்றன.

    இதுவரை வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளுக்கான சிறப்பு முகாம்களுக்கும் தமிழக தேர்தல் துறை ஏற்பாடு செய்துள்ளது. வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.

    இதுவரை கடந்த 13, 14 மற்றும் 20, 21 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்த சிறப்பு முகாம்களின் மூலம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம், தொகுதிக்குள்ளேயே முகவரி மாற்றம் ஆகிய பணிகளுக்கு விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டுள்ளன.

    4 சிறப்பு முகாம்களிலும் சேர்த்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6 லட்சத்து 14 ஆயிரத்து 166 பேர் மனு அளித்துள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். கடந்த 14-ந்தேதி நடந்த சிறப்பு முகாமில் மட்டும் 2 லட்சத்து 58 ஆயிரத்து 278 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.

    தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு

    வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம், ஆட்சேபனை தெரிவிப்பது ஆகியவற்றுக்கு மட்டும் 1 லட்சத்து 518 பேர் மனு அளித்துள்ளனர். 14-ந்தேதி நடந்த முகாமில் மட்டும் இதற்காக 33 ஆயிரத்து 762 பேர் மனு அளித்துள்ளனர்.

    வாக்காளர் பட்டியலில் பெயர், முகவரி உள்ளிட்ட திருத்தங்களை செய்ய 78 ஆயிரத்து 862 பேர் மனு அளித்துள்ளனர். ஒரே சட்டசபை தொகுதியில் முகவரி மாற்றம் செய்ய 66 ஆயிரத்து 33 பேர் மனு கொடுத்துள்ளனர்.

    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம் என 4 சிறப்பு முகாம்களிலும் சேர்த்து மொத்தம் 8 லட்சத்து 59 ஆயிரத்து 580 பேர் மனு கொடுத்துள்ளனர். வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வதற்கான மேலும் ஒரு சிறப்பு முகாம் வருகிற 27 மற்றும் 28-ந்தேதிகளில் நடக்கிறது.



    Next Story
    ×