search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பூண்டி ஏரி
    X
    பூண்டி ஏரி

    பூண்டி ஏரியில் தண்ணீர் திறப்பு 21 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு

    பூண்டி ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பு இன்று காலை 21 ஆயிரம் கன அடியாக உயர்த்தப்பட்டது.
    ஊத்துக்கோட்டை:

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றாக பூண்டி ஏரி உள்ளது. தொடர் மழை காரணமாக பூண்டி ஏரி முழுவதும் நிரம்பியது.

    ஏரியின் மொத்த கொள்ளளவு 3 ஆயிரத்து 231 மி.கன அடி ஆகும். தற்போது ஏரியில் 2 ஆயிரத்து 342 மி.கன அடி தண்ணீர் உள்ளது.

    தொடர்ந்து மழை பெய்து கொண்டு இருந்ததால் ஏரியில் இருந்து தொடர்ந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது. இந்த நிலையில் வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்தம் காரணமாக திருவள்ளூர், ஆந்திர மாநிலத்தில் கன மழை கொட்டித் தீர்த்தது. இதனால் பூண்டி ஏரிக்கு நீரவரத்து தொடர்ந்து அதிகரித்தது. இன்று காலை நிலவரப்படி ஏரிக்கு 34 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.

    இதையடுத்து பூண்டி ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பு இன்று காலை 21 ஆயிரம் கன அடியாக உயர்த்தப்பட்டது. ஏரிக்கு மேலும் அதிகமாக தண்ணீர் வந்து கொண்டு இருப்பதால் உபரி நீர் திறப்பு அதிகரிக்கப்படும் என்று தெரிகிறது.

    பூண்டி ஏரியின் மொத்த உயரம் 35 அடி. இதில் 32.37 அடிக்கு தண்ணீர் உள்ளது. ஏரிக்கு வரும் நீர் வரத்தை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.
    Next Story
    ×