search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழையில் நினைந்தபடி செல்லும் வாகன ஓட்டி
    X
    மழையில் நினைந்தபடி செல்லும் வாகன ஓட்டி

    சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை

    தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் ஆகிய 6 மாவட்டங்களுக்கும், புதுச்சேரிக்கும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தற்போது, சென்னையில் இருந்து தென்கிழக்கு திசையில் 340 கி.மீ., தொலைவில் மையம் கொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதன் எதிரொலியால், இன்று அதி கனமழை பெய்யும் என்பதால், தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் ஆகிய 6 மாவட்டங்களுக்கும், புதுச்சேரிக்கும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், சென்னையின் பல்வேறு இடங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, மெரினா, ராயப்பேட்டை, பாரிமுனை, ஈக்காட்டுத்தாங்கல், கோட்டூர்புரம், அடையாறு, மயிலாப்பூர், தாம்பரம், வேளச்சேரி, ராயபுரம், அம்பத்தூர், சைதாப்பேட்டை, குரோம்பேட்டை உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது.

    இதையும் படியுங்கள்.. கரையை நெருங்கும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி: 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
    Next Story
    ×