search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் கே.என்.நேரு மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து கோரிக்கை மனு வாங்கிய காட்சி
    X
    அமைச்சர் கே.என்.நேரு மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து கோரிக்கை மனு வாங்கிய காட்சி

    ஒரே நாளில் மழை வெள்ளத்தை தி.மு.க. அரசு அகற்றியது - அமைச்சர் கே.என்.நேரு

    முதல்-அமைச்சர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்தித்து ஆறுதல் கூறி முதற்கட்டமாக ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கொடுத்து இருக்கிறார் என கேஎன் நேரு கூறியுள்ளார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியில் அரசு சார்பில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் இன்று நடைபெற்றது. இந்த முகாமில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேரு கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கினார்.

    இதில் அமைச்சர் கே.என். நேரு பேசியதாவது:-

    தமிழ்நாடு முழுவதும் மழை அதிகமாக பெய்து, சென்னை மாநகரம் பெரிய அளவில் பாதித்தது. சென்னையை போன்று பல்வேறு நகரங்களும் பாதிக்கின்ற நிலை ஏற்பட்டது. அந்த பகுதிகளில் எல்லாம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    சென்னையில் 2015-ம் ஆண்டு ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் கிட்டத்தட்ட 500 பேருக்கு மேல் இறந்திருக்கிறார்கள். ஆனால், இந்த முறை அதே அளவுக்கு மழை பெய்தும் கூட 3 பேர் தான் அவர்களுடைய உடல் நலமின்மை காரணமாக தான் இறந்தனர்.

    ஓரிரு இடங்களை தவிர மற்ற இடங்களில் ஒரே நாளில் நீரை அகற்றி பொதுமக்களுக்கு சிரமம் இல்லாத ஆட்சியாக இந்த ஆட்சி செயல்பட்டு கொண்டிருக்கின்றது.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்தித்து ஆறுதல் கூறி முதற்கட்டமாக ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கொடுத்து இருக்கிறார். சாலைகளை சீரமைப்பதற்காக ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். நகராட்சி நிர்வாக துறைக்கு பேரீடர் தொகையாக ரூ.300 கோடி வழங்கி உள்ளார். கிட்டத்தட்ட ரூ.1000 கோடிக்கு முதல்-அமைச்சர் அனுமதி அளித்து இருக்கிறார்.

    முக ஸ்டாலின்

    ஒருவர் 5 ஆண்டு காலம் ஒரே இடத்தில் குடியிருக்கிறார் என்றால் அந்த இடத்திற்கு அவருக்கு பட்டா வழங்க வேண்டும் என ஏற்கனவே தலைவர் கலைஞர் சொல்லி இருக்கிறார். எனவே உங்களிடம் வாங்கிய மனுக்களுக்கு உரிய முறையில் பரிசீலித்து நல்ல தீர்வு மாவட்ட நிர்வாகம் வழங்கும். உறுதுணையாக நாங்கள் இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    குறைதீர்க்கும் முகாமில் தி.மு.க. மாவட்ட துணை அமைப்பாளர் மல்லிகா திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக நிர்வாகிகள் அவரை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். 

    இதையும் படியுங்கள்...20 பொருட்களுடன் பொங்கல் பரிசு தொகுப்பு -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

    Next Story
    ×