search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி பொதுமக்களக்கு பிளீச்சிங் பவுடர் வழங்கினார்.
    X
    சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி பொதுமக்களக்கு பிளீச்சிங் பவுடர் வழங்கினார்.

    சென்னையில் மழை வெள்ளம் பாதித்த 25 ஆயிரம் வீடுகளுக்கு குளோரின் மாத்திரை-பிளிச்சிங் பவுடர்

    கடந்த 2 நாட்களில் 21 ஆயிரத்து 725 வீடுகளுக்கு 8,647 கிலோ எடையுள்ள பிளிச்சிங் பவுடர் விநியோகிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் கடந்த 6 நாட்களாக நடந்த தீவிர மீட்பு நடவடிக்கையால் இயல்பு நிலை திரும்பி உள்ளது.

    மழை நீர் சூழ்ந்த பகுதிகளில் நோய் தொற்று ஏற்படக்கூடும் என்பதால் சுகாதாரத்துறை முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    ஒவ்வொரு வீடுகள் மற்றும் தெருக்களில் இருந்த சேறும் சகதிகள் அகற்றப்பட்டு பிளிச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் பிளிச்சிங் பவுடர் பாக்கெட்டுகளும், குடிநீரால் தொற்று ஏற்படாமல் தடுக்கும் வகையில் குளோரின் மாத்திரைகளும் வழங்கப்படுகின்றன.

    கடந்த 2 நாட்களில் 21 ஆயிரத்து 725 வீடுகளுக்கு 8,647 கிலோ எடையுள்ள பிளிச்சிங் பவுடர் விநியோகிக்கப்பட்டுள்ளது.

    இது தவிர 25 ஆயிரத்து 670 வீடுகளுக்கு குளோரின் மாத்திரைகள் வினியோகிக்கப்பட்டன. மொத்தம் 53,654 மாத்திரைகள் தண்ணீரில் கலந்து உட்கொள்ள வழங்கப்பட்டுள்ளது.

    20 லிட்டர் தண்ணீருக்கு ஒரு குளோரின் மாத்திரையை பயன்படுத்த பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து மண்டலங்களிலும் மழை நீர் சூழ்ந்த பகுதி மக்களுக்கு சென்னை மாநகராட்சி சார்பில் நோய் பரவாமல் தடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
    Next Story
    ×