search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    உடுமலை அருகே தடுப்பணை உடைப்பால் வீணாகும் தண்ணீர்

    தடுப்பணையை சரி செய்யாவிட்டால் முழுவதும் உடைந்து விழும் அபாயம் உள்ளது.
    உடுமலை:

    உடுமலை ஒன்றியம் உடுக்கம்பாளையம் ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் 2018-19ம் ஆண்டில் ரூ.15 லட்சம் செலவில், பெரியபள்ளம் ஓடையின் குறுக்கே 15.2 மீட்டர் நீளத்தில் தடுப்பணை கட்டப்பட்டது. 

    இந்த தடுப்பணை சுற்றுப்பகுதியிலுள்ள விவசாய நிலங்களிலுள்ள போர்வெல், தடுப்பணைகளுக்கு நிலத்தடி நீர் மட்ட ஆதாரமாகவும், கால்நடைகள், மக்கள் குடிநீர்ஆதாரமாகவும் உள்ளது.

    இந்த தடுப்பணை கட்டப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்குள் தற்போது பெய்த மழைக்கு தாங்காமல் ஒரு பகுதி உடைந்தது. இதனால் மழை நீர் சேமிக்க முடியாமல் நீர் அனைத்தும் வீணாகி வருகிறது. தடுப்பணையை சரி செய்யாவிட்டால் முழுவதும் உடைந்து விழும் அபாயம் உள்ளது.

    எனவே அதிகாரிகள் இந்த தடுப்பணையை உடனடியாக சரி செய்து பருவ மழையை சேமிக்கும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
    Next Story
    ×