search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விடுதிகள், பள்ளி கட்டிடங்களை முக ஸ்டாலின் திறந்து வைத்தார்
    X
    விடுதிகள், பள்ளி கட்டிடங்களை முக ஸ்டாலின் திறந்து வைத்தார்

    ரூ.23.78 கோடியில் கட்டப்பட்டுள்ள விடுதிகள், பள்ளி கட்டிடங்கள்- மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

    திருப்பத்தூர் மாவட்டம் அத்தனாவூரில் 1 கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 2 பழங்குடியினர் பள்ளி மாணவ, மாணவியர் விடுதிக் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது.
    சென்னை:

    ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூரில் 2 கோடியே 44 லட்சத்து 41 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும், வல்லத்தில் 1 கோடியே 27 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும், திருவாரூர் மாவட்டம் திருவாரூரில் 2 கோடியே 38 லட்சத்து 9 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும், கோட்டூர் மற்றும் நன்னிலத்தில் தலா 1 கோடியே 27 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும், 5 ஆதிதிராவிடர் பள்ளி மாணவர் விடுதிக் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது.

    நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் ஆகிய இடங்களில் தலா 1 கோடியே 27 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2 ஆதிதிராவிடர் பள்ளி மாணவியர் விடுதிக் கட்டிடங்கள், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் 1 கோடியே 26 லட்சத்து 9 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆதிதிராவிடர் கல்லூரி மாணவியர் விடுதிக்கட்டிடம், திருச்சிராப்பள்ளி மாவட்டம் செங்காட்டுப்பட்டியில் 3 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், திருப்பத்தூர் மாவட்டம் அத்தனாவூரில் 1 கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் 2 பழங்குடியினர் பள்ளி மாணவ, மாணவியர் விடுதிக் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது.

    நாமக்கல் மாவட்டம் செங்கரையில் 1 கோடியே 54 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பழங்குடியினர் மேல்நிலைப் பள்ளிக் கட்டிடம், நாமக்கல் மாவட்டம் செங்கரையில் 3 கோடியே 61 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் நீலகிரி மாவட்டம் மு.பாலாடாவில் 1 கோடியே 23 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும் கட்டப்பட்டுள்ள உண்டி உறைவிடப் பள்ளிக் கட்டிடங்கள் என மொத்தம் 23 கோடியே 78 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக் கட்டிடங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.



    Next Story
    ×