search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நலத்திட்ட உதவிகளை வழங்கினார் மு.க.ஸ்டாலின்
    X
    நலத்திட்ட உதவிகளை வழங்கினார் மு.க.ஸ்டாலின்

    கொளத்தூர் மருத்துவ முகாமில் மு.க.ஸ்டாலின் ஆய்வு

    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வட சென்னையில் உள்ள 22 இடங்களில் மருத்துவ முகாம் ஆய்வு மற்றும் நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்.
    சென்னை:

    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வட சென்னையில் 22 இடங்களில் மருத்துவ முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைக்கிறார். அந்த வகையில், சென்னை, கொளத்தூர் பகுதியில் இன்று காலை  நலத்திட்ட உதவிகள் மற்றும் மருத்துவ முகாம்களை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    கனமழை எதிரொலியால் கொளத்தூரில் உள்ள ஜானகிராமன் தெரு, ஒத்தவாடை தெரு உள்ளிட்ட தெருக்களில் முதல் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.

    அங்குள்ள மக்களிடம் குறைகளையும் கேட்டறிந்தார். அப்போது,
    கனமழையால் தண்ணீர் தேங்கி சாலைகள் சேதமடைந்துள்ளதாகவும், வரக்கூடிய காலங்களில் மழை நீர் தேங்காமல் இருக்க நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலும், மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பிரெட், பிஸ்கெட் உள்ளிட்ட நிவாரண பொருட்களும், ஒரு சில இடங்களில் சமைத்த உணவும் வழங்கப்பட்டது.
    Next Story
    ×