search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா தடுப்பூசி
    X
    கொரோனா தடுப்பூசி

    தமிழகத்தில் இன்று 8-வது கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம்

    தமிழகம் முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்தும் பொருட்டு 7 கட்டங்களாக மெகா சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றன.
    சென்னை:

    கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் பொருட்டு 18 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் தமிழகத்தின் அனைத்து மாவட்ட ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

    இந்தியாவில் தடுப்பூசி போடும் பணி தொடங்கிய முதல் 9 மாதங்களில் 100 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.

    இந்நிலையில், தமிழகத்தில் 8-வது கட்டமாக இன்று கொரோனா தடுப்பூசி மெகா முகாம்கள் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற உள்ளது. இந்த மாத இறுதிக்குள் 100 சதவீதம் தடுப்பூசி என்ற இலக்கை நோக்கி தமிழகம் சென்றுகொண்டிருக்கிறது. 

    அனைத்து மாவட்டங்களிலும் முதல் மற்றும் 2-வது கட்ட தடுப்பூசி செலுத்தாவர்களை கண்டறிந்து போடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளை சுகாதாரத் துறை செய்துவருகிறது.

    காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை இந்த சிறப்பு முகாம்கள் நடைபெறும். இதுவரை தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என பொது சுகாதாரத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
     
    Next Story
    ×