search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழ் நாடு அரசு
    X
    தமிழ் நாடு அரசு

    9 புதிய மாவட்டங்களில் நகராட்சி, பேரூராட்சி எல்லை மறுவரையறை- தமிழக அரசு வெளியிட்டது

    இந்திய தேர்தல் ஆணைய வரைவு வாக்காளர் பட்டியல்படி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களுக்கு 2019-ம் ஆண்டு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்தது.

    வார்டு மறுவரையறைக்குப் பிறகு புதிதாக உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை ஆகிய 9 மாவட்டங்களுக்கு கடந்த மாதம் 6 மற்றும் 9-ந் தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்தது.

    ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அடுத்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கை மேற் கொண்டு வருகிறது. இந்திய தேர்தல் ஆணைய வரைவு வாக்காளர் பட்டியல்படி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

    இந்த நிலையில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் நகராட்சி, பேரூராட்சிகள் மறுவரையறை செய்யப்பட்டன.

    காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 9 மாவட்டங்களில் நகராட்சி, பேரூராட்சி எல்லைகளை மறுவரையறை செய்து தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

    அடுத்து தரம் உயர்த்தப்பட்ட மாநகராட்சிகளுக்கான வார்டு மறுவரையறை பணிகளும் நிறைவடையும் தருவாயில் உள்ளது. விரைவில் அதற்கான அறிவிப்பும் வெளியாக உள்ளது.

    இந்த அறிவிப்பு வெளியான பிறகு நகர்புற உள்ளாட்சி தேர்தல் தேதியை மாநில தேர்தல் ஆணையம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படியுங்கள்... செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

    Next Story
    ×