search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் துரைமுருகன்
    X
    அமைச்சர் துரைமுருகன்

    முல்லை பெரியாறு அணையில் இருந்து சட்டப்படியே தண்ணீர் திறக்கப்பட்டது- அமைச்சர் துரைமுருகன் விளக்கம்

    முல்லை பெரியாறு அணை திடமாக உள்ளது என்று சென்னையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    சென்னையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முல்லை பெரியாறு அணையில் உள்ள மரங்களை வெட்ட கேரள வனத்துறை அதிகாரி அளித்த அனுமதி அடிப்படையிலேயே நன்றி தெரிவித்து கேரள முதல்-மந்திரிக்கு, தமிழக முதல்-அமைச்சர் கடிதம் எழுதினார்.

    முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் டாக்டர் ஜோசப் போட்ட ரிட் மனுவின் தீர்ப்பின் வழிக்காட்டுதலின் சட்டபடியே தண்ணீர் திறக்கப்பட்டது. இதுபற்றி முன் எச்சரிக்கைக்காக கேரள அரசிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    முல்லை பெரியாறு அணை


    மேலும், 138 அடி தான் நீர் இருக்க வேண்டும், 29-ந் தேதி 138.75 அடியாக நீர் இருந்ததால், தண்ணீரை வெளியேற்ற வேண்டிய சூழல் உருவானது.

    பூகம்பம் வர வாய்ப்பு இருப்பதாக கூறி 136 அடிக்கு முல்லை பெரியாறு அணையின் நீர் இருப்பை குறைக்க வேண்டும் என கேரளா கோரிக்கை விடுத்து வருகிறது. ஆனால் முல்லை பெரியாறு அணை திடமாக உள்ளது. இதில் தமிழகம் நீதிமன்றத்தை நாடியுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.


    Next Story
    ×