search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்-விவசாயிகள் வலியுறுத்தல்

    காய்கறி சாகுபடி விளைநிலங்களும் மழைநீர் தேங்கி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
    உடுமலை:

    உடுமலை சுற்றுப்பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. பி.ஏ.பி. நான்காம் மண்டல பாசனம் மற்றும் மானாவாரியாக பல ஆயிரம் ஏக்கரில் மக்காச்சோளம் சோளம்  சாகுபடி களை விவசாயிகள் மேற்கொண்டுள்ளனர்.

    தொடர் மழை காரணமாக பல்வேறு இடங்களில் நிலைப்பயிர்கள் பாதித்துள்ளன.கொங்கல குறிச்சி உட்பட்ட பகுதிகளில் தொடர் மழை மற்றும்  காற்றுக்கு மக்காச்சோள பயிர்கள் அடியோடு சாய்ந்து உள்ளன.

    இதேபோல்காய்கறி சாகுபடி விளைநிலங்களும் மழைநீர் தேங்கி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வளர்ச்சி தருணத்திலும் அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் அடியோடு சாய்ந்ததால் சாகுபடியில் நஷ்டம் ஏற்படும் சூழல் உள்ளது.

    எனவே இதுகுறித்து வருவாய் துறை ,வேளாண்மை துறை வாயிலாக ஆய்வு நடத்தி நஷ்டஈடு வழங்க  நடவடிக்கை எடுக்க வேண்டும்என உடுமலை பகுதி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
    Next Story
    ×