என் மலர்
செய்திகள்

கைது
குளித்தலை பகுதியில் நீதிமன்ற உத்தரவை மீறி பட்டாசு வெடித்த 2 பேர் கைது
குளித்தலை பகுதியில் நீதிமன்ற உத்தரவை மீறி பட்டாசு வெடித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
குளித்தலை:
குளித்தலை போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலை மற்றும் சுங்ககேட் பகுதியில் உச்சநீதிமன்ற உத்தரவை மீறி தீபாவளி பண்டிகை அன்று இரவு 10 மணிக்கு மேல் பட்டாசு வெடித்து காற்று மண்டலத்திற்கு கேடு ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்ட குளித்தலை கடம்பர் கோவில் பகுதியை சேர்ந்த ராம்குமார் (வயது 22), மைலாடி பகுதியைச் சேர்ந்த உதயகுமார் (24) ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.

Next Story