என் மலர்

  செய்திகள்

  கைதான கேசவசர்மா.
  X
  கைதான கேசவசர்மா.

  உடுமலையில் 10-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மாணவியின் வயிறு பெரிதானதால் சந்தேகமடைந்த பெற்றோர் மாணவியிடம் விசாரித்தனர். அப்போது கேசவசர்மா ஆசைவார்த்தை கூறி தன்னை ஏமாற்றி விட்டதாக தெரிவித்தார்.
  உடுமலை:

  உடுமலை பத்ரகாளியம்மன் லேஅவுட்டை சேர்ந்தவர் கேசவசர்மா( வயது22).தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் பத்தாம் வகுப்பு மாணவியை காதலித்து வந்துள்ளார்.

  மேலும் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி  மாணவியுடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதனால் அந்த மாணவி கர்ப்பமானார். இதுகுறித்து கேச வசர்மாவிடம் அந்த மாணவி தெரிவித்தபோது திருமணம் செய்து கொள்ள மறுத்து விட்டதாக தெரிகிறது.

  இந்நிலையில் மாணவியின் வயிறு பெரிதானதால் சந்தேகமடைந்த பெற்றோர் மாணவியிடம் விசாரித்தனர். அப்போது கேசவசர்மா ஆசைவார்த்தை கூறி தன்னை ஏமாற்றி விட்டதாக தெரிவித்தார்.

  இதையடுத்து மாணவியின் தாயார் உடுமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த போலீசார்  கேசவசர்மாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

  பாதிக்கப்பட்ட மாணவி திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
  Next Story
  ×