search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    மதுரை மாவட்டத்தில் 26 லட்சத்து 81 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர்

    மதுரை மாவட்டத்தில் அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாக மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதி அமைந்து உள்ளது. இங்கு 3 லட்சத்து 26 ஆயிரத்து 978 வாக்காளர்கள் இடம் பெற்று உள்ளனர்.
    மதுரை:

    மதுரை மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் அனீஷ்சேகர் இன்று காலை வெளியிட்டார்.

    அதன்படி மதுரை மாவட்டத்தில் உள்ள மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 26,81,727. இதில் ஆண் வாக்காளர் எண்ணிக்கை 13,17,631. பெண் வாக்காளர் எண்ணிக்கை 13,63,897. மூன்றாம் பாலின வாக்காளர் எண்ணிக்கை 199 ஆகும்.

    இதனைத் தொடர்ந்து கலெக்டர் அனீஷ்சேகர் நிருபர்களிடம் பேசுகையில், “வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் ஆகியவற்றை வருகிற 30-ந்தேதி வரை மேற்கொள்ளலாம். இது தவிர 13, 14, 27, 28 ஆகிய 4 தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.

    மதுரை மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் 19-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அப்போது மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 26 லட்சத்து 97 ஆயிரத்து 682 ஆக இருந்தது. அதில் 25 ஆயிரத்து 415 பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டனர்.

    அதேநேரத்தில் 9 ஆயிரத்து 460 பேர் வாக்காளர் பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்டு உள்ளனர்.

    எனவே கடந்த மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் வாக்காளர் பட்டியல் எண்ணிக்கையில் 15,955 பேர் குறைந்து உள்ளனர்.

    மதுரை மாவட்டத்தில் அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாக மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதி அமைந்து உள்ளது. இங்கு 3 லட்சத்து 26 ஆயிரத்து 978 வாக்காளர்கள் இடம் பெற்று உள்ளனர்.

    மதுரை மாவட்டத்தில் குறைந்த வாக்காளர் எண்ணிக்கை கொண்ட தொகுதியாக சோழவந்தான் உள்ளது. இங்கு 2 லட்சத்து 16 ஆயிரத்து 715 வாக்காளர்கள் இடம் பெற்று உள்ளனர்.

    மதுரை மாவட்டத்தில் 1,164 வாக்குச்சாவடி மையங்களும், 2718 வாக்குச் சாவடிகளும் உள்ளது.

    மதுரை மேலூர் தொகுதியில் 2 லட்சத்து 43 ஆயிரத்து 250 பேர் இடம்பெற்று உள்ளனர். இதில் ஆண்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 904.

    மதுரை கிழக்கு தொகுதியில் 3 லட்சத்து 26 ஆயிரத்து 978 பேர் இடம் பெற்று உள்ளனர். இதில் ஆண்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 383.

    சோழவந்தான் தொகுதியில் 2 லட்சத்து 16 ஆயிரத்து 715 பேர் இடம் பெற்று உள்ளனர். இதில் ஆண்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 503.

    மதுரை வடக்கு தொகுதியில் 2 லட்சத்து 42 ஆயிரத்து 656 பேர் இடம் பெற்று உள்ளனர். இதில் ஆண்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 506.

    மதுரை தெற்கு தொகுதியில் 2 லட்சத்து 29 ஆயிரத்து 784 பேர் இடம் பெற்று உள்ளனர். இதில் ஆண்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 13 ஆயிரத்து ஒன்று ஆகும்.

    மதுரை மத்திய தொகுதியில் 2 லட்சத்து 39 ஆயிரத்து 550 பேர் இடம்பெற்று உள்ளனர். இதில் ஆண்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 818.

    மதுரை மேற்கு தொகுதியில் 3 லட்சத்து 6 ஆயிரத்து 547 பேர் இடம் பெற்று உள்ளனர். இதில் ஆண்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 715.

    திருப்பரங்குன்றத்தில் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 3 லட்சத்து 18 ஆயிரத்து 963 ஆகும். இதில் ஆண்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 715.

    திருமங்கலத்தில் 2 லட்சத்து 74 ஆயிரத்து 675 பேர் இடம் பெற்று உள்ளனர். இதில் ஆண்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 306.

    உசிலம்பட்டி தொகுதியில் 2 லட்சத்து 82 ஆயிரத்து 609 பேர் இடம்பெற்று உள்ளனர். இதில் ஆண் களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 349.

    வாக்காளர் பட்டியலில் புதிதாக பதிவு செய்வதற்கு, ஒரு தொகுதியில் இருந்து வேறு தொகுதிக்கு முகவரி மாற்றம் செய்வதற்கு படிவம்-6, பாஸ்போர்ட் வைத்துள்ள வெளிநாடு வாழ் இந்தியர்கள் பதிவு செய்வதற்கு படிவம்-6ஏ, ஏற்கனவே பதிவு செய்துள்ள பெயரை நீக்கம் செய்ய, அல்லது வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர் சேர்ப்பு குறித்து ஆட்சேபணை தெரிவிக்க படிவம்-7, வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளை மாற்றம் அல்லது திருத்தம் செய்வதற்கு படிவம்-8, ஒரே சட்டமன்றத் தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்வதற்கு படிவம்-8ஏ ஆகியவற்றில் விண்ணப்பம் செய்ய வேண்டும்.

    அடுத்த ஆண்டு ஜனவரி 1-ந்தேதி 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் இன்று முதல் வருகிற 30-ந் தேதி வரை அலுவலக வேலை நாட்களில் வாக்குச்சாவடி மையங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள், மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் விண்ணப்பம் பெற்று, பூர்த்தி செய்து நேரடியாக அளிக்கலாம். அல்லது www.nvsp.in இணையதள முகவரி மூலமாக விண்ணப்பிக்கலாம். செல்போனில் வாக்காளர் உதவி எண் செயலி (Voters Helpline Mobile App) மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

    வருகிற 13, 14, 27, 28-ந் தேதிகளில் அங்கு உள்ள வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடக்க உள்ளது.

    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் படிவத்துடன் வயது மற்றும் முகவரிக்கான ஆதாரங்களை இணைக்க வேண்டும். மேலும் விவரம் மற்றும் தகவலுக்கு 1950 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

    பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் விண்ணப்பப் படிவங்கள் மீது உரிய விசாரணைகள் மேற்கொண்டு இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த ஆண்டு ஜனவரி 5-ந் தேதி அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றார்.
    Next Story
    ×