search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டாஸ்மாக் பார்
    X
    டாஸ்மாக் பார்

    தமிழகத்தில் நாளை முதல் டாஸ்மாக் பார்கள் திறப்பு - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

    மது அருந்த வருபவர்களின் உடல் வெப்பநிலையை பரிசோதித்து உள்ளே அனுப்பவேண்டும் என டாஸ்மாக நிர்வாகம் அறிவித்துள்ளது.
    சென்னை:

    டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் எல்.சுப்பிரமணியன், அனைத்து மண்டல-மாவட்ட மேலாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், நவம்பர் 1-ந்தேதி (நாளை) முதல் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடை பார்கள் திறக்க அனுமதிக்கப்படுகிறது. உணவுப்பொருட்கள் விற்பனை செய்ய, காலி மதுபாட்டில்களை சேகரிக்க பார்களுக்கு வழங்கப்பட்டிருந்த ஒப்பந்தம் கடந்த மாதம் 30-ந்தேதியுடனும், சில கடைகளுக்கு இம்மாத இறுதியிலும் (இன்று) முடிவுக்கு வந்துள்ளது. அவர்களுக்கு வருகிற டிசம்பர் 31-ந்தேதி வரை அல்லது புதிய டெண்டர் இறுதி செய்யப்படும்வரை ஒப்பந்தம் நீட்டிக்கப்படுகிறது. அரசு தேவையான உத்தரவை பிறப்பித்தாலோ, தளர்வுகள் அளித்தால் மட்டுமே பார்களுக்கான புதிய டெண்டர் கோரவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

    மேலும் பார்களை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதில் மதுப்பிரியர்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றி அமர்ந்து மது அருந்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும், பார்களின் முகப்பில் கிருமிநாசினி வைக்கப்படவேண்டும். மது அருந்த வருபவர்களின் உடல் வெப்பநிலையை பரிசோதித்து உள்ளே அனுப்பவேண்டும். முககவசம் அணியாதவர்களை அனுமதிக்கக்கூடாது என கூறப்பட்டுள்ளது.

    டாஸ்மாக் கடை

    டாஸ்மாக் நிர்வாகத்தின் இந்த புதிய அறிவிப்பு, மதுபிரியர்களுக்கு குஷியூட்டுவதாக அமைந்திருக்கிறது.

    Next Story
    ×