search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக அரசு
    X
    தமிழக அரசு

    ஓய்வு பெறும் நாளில் அரசு ஊழியர்கள் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை கூடாது- அரசாணை வெளியீடு

    அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் 3 மாதங்களுக்கு முன்பாக குற்றம் சார்ந்த நடவடிக்கைகள் மீது தீர்வு காண வேண்டும். கடைசி நேரத்தில் தற்காலிக பணி நீக்க நடவடிக்கையை தவிர்க்க வேண்டும் என்று அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
    சென்னை:

    அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை ஓய்வு பெறும் நாளில் தற்காலிக பணி நீக்கம் செய்யக்கூடாது என கோரிக்கை வைக்கப்பட்டது.

    இதனை பரிசீலித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் 110-வது விதியின் கீழ் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் நாளில் தற்காலிக பணி நீக்கம் நடைமுறை தவிர்க்கப்படும் என்று அறிவித்தார். அதையொட்டி தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    முக ஸ்டாலின்

    மனிதவள மேம்பாட்டு துறையின் செயலாளர் மைதிலி ராஜேந்திரன் வெளியிட்டுள்ள அரசாணையில், ‘‘அரசு ஊழியர்கள் மீது ஓய்வு பெறும் நாளில் சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கக்கூடாது. 3 மாதங்களுக்கு முன்பாக குற்றம் சார்ந்த நடவடிக்கைகள் மீது தீர்வு காண வேண்டும். கடைசி நேரத்தில் தற்காலிக பணி நீக்க நடவடிக்கையை தவிர்க்க வேண்டும்’’ என்று அதில் கூறி உள்ளார்.


    இதையும் படியுங்கள்...நாட்டின் விடுதலைக்காக வாழ்க்கையை அர்ப்பணித்த தியாக செம்மல் தேவர் திருமகனார்
    Next Story
    ×