search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருமூர்த்தி அணையில் இருந்து  கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.
    X
    திருமூர்த்தி அணையில் இருந்து கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.

    திருமூர்த்தி அணையில் இருந்து 4-ம் சுற்று தண்ணீர் திறப்பு

    கால்வாய் பராமரிப்பு உள்ளிட்ட காரணங்களினால் ஆகஸ்டு 6-ந் தேதி முதல் பாசனத்திற்கு நீர் வழங்கப்பட்டு வருகிறது.
    உடுமலை:

    பி.ஏ.பி., பாசன திட்டத்தின் கீழ் திருப்பூர், கோவை மாவட்டத்தில் 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த நிலங்கள் நான்கு மண்டலமாக பிரித்து சுழற்சி முறையில் தண்ணீர் வழங்கப்படுகிறது. அதன் அடிப்படையில் நான்காம் மண்டல பாசனத்திற்குட்பட்ட 94 ஆயிரத்து  68 ஏக்கர் நிலங்களுக்கு ஆகஸ்டு 3-ந்தேதி  தண்ணீர் திறக்கப்பட்டது.

    இம்மண்டல பாசன நிலங்களுக்கு 135 நாட்களில் 21 நாட்கள் திறப்பு, 7 நாள் நிறுத்தம் என்ற அடிப்படையில் 5 சுற்றுக்களாக, மொத்தம் 9,500 மில்லியன் கன அடி நீர் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கால்வாய் பராமரிப்பு உள்ளிட்ட காரணங்களினால் ஆகஸ்டு 6&ந் தேதி முதல்  பாசனத்திற்கு நீர் வழங்கப்பட்டு வருகிறது.

    தென்மேற்கு பருவ மழையால் பி.ஏ.பி.,திட்ட தொகுப்பு அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்ததால் 3 சுற்றுகளின் போதும் இடைவெளியில்லாமல் தொடர்ந்து தண்ணீர் வழக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் பாசன பகுதிகளில் மழை பொழிவு மற்றும் திருமூர்த்தி அணை நீர் மட்டம் குறைந்ததால் கடந்த ஒரு வாரமாக நீர் திறப்பு நிறுத்தப்பட்டு இடைவெளி விடப்பட்டது.

    தற்போது திருமூர்த்தி அணை நீர் மட்டம் உயர்ந்துள்ள நிலையில் விவசாயிகள் கோரிக்கையை ஏற்று நேற்று மாலை பிரதான கால்வாயில் குறைந்தளவு தண்ணீர் திறக்கப்பட்டது. படிப்படியாக தண்ணீர் திறப்பை அதிகரித்து இன்று காலை முதல் வினாடிக்கு 600 கன அடி வெளியேற்றப்படுகிறது.

    இதுகுறித்து பி.ஏ.பி., அதிகாரிகள் கூறுகையில், 3 சுற்றுக்கள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு இடைவெளி விடப்பட்டது. தற்போது விவசாயிகள் கோரிக்கையை ஏற்று 4-ம் சுற்றுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது  என்றனர்.
    Next Story
    ×