search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த கொள்ளையனின் உருவம்.
    X
    கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த கொள்ளையனின் உருவம்.

    உடுமலையில் இன்று ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி - அலாரம் ஒலித்ததால் கொள்ளையன் தப்பியோட்டம்

    இன்று அதிகாலை 2 மணியளவில் ஏ.டி.எம். மையத்திற்குள் புகுந்த முகமூடி கொள்ளையன் எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றுள்ளான்.
    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை ஏரிப்பாளையம் பகுதியில் எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம். மையம் உள்ளது. இதன் மூலம் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வங்கி வாடிக்கையாளர்கள் பணம் எடுத்து வந்தனர். 

    இந்தநிலையில் இன்று அதிகாலை 2 மணியளவில் ஏ.டி.எம். மையத்திற்குள் புகுந்த முகமூடி கொள்ளையன் எந்திரத்தை உடைத்து பண த்தை கொள்ளையடிக்க முயன்றுள்ளான். ஆனால் எந்திரத்தை உடைக்க முடியாத நிலையில், ஏ.டி.எம். மையத்தில் பொருத்தப்பட்டிருந்த அலாரம் ஒலிக்க ஆரம்பி க்கவே, கொள்ளையன் கொள்ளை முயற்சியை கைவிட்டு தப்பி சென்றான்.

    ஏ.டி.எம்.மையத்தில் அலாரம் ஒலிக்கவே அப்பகுதி பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது எந்திரம் உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.  

    உடனே இதுகுறித்து வங்கிஅதிகாரிகள் மற்றும் உடுமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அதிகாரிகள், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். மேலும் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை போலீசார் பார்வையிட்டு ஆய்வுசெய்தனர். 

    அப்போது இன்று அதிகாலை 2 மணியளவில் முகமூடி அணிந்த மர்மநபர் ஏ.டி.எம். மையத்திற்குள் நுழைந்து எந்திரத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்கும் முயற்சிகள் பதிவாகி இருந்தது. எந்திரத்தை உடைக்க முடியாததால் பல லட்சம் பணம் தப்பியது. கொள்ளையனின் உருவத்தை வைத்து போலீசார் விசாரணை நடத்தி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் உடுமலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×