search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    அதிகாரிகள் மீது நடவடிக்கை - 5 ஆயிரம் மனுக்களை அனுப்பிய பி.ஏ.பி., விவசாயிகள்

    கடந்த 15 ஆண்டுகளாக பி.ஏ.பி., பொறியாளர்கள் செய்து வரும் முறைகேடான பாசன நீர் வினியோகத்தால் எங்கள் வாழ்வாதாரம் முற்றிலும் சீரழிந்து விட்டதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
    காங்கயம்:
     
    காங்கயம், வெள்ளகோவில் பி.ஏ.பி., பாசன விவசாயிகள் தண்ணீரை முறையாக வழங்க வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். தற்போது முதல்வர் தனிபிரிவு, நீர்வளத்துறை அமைச்சர், பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு தலைமை பொறியாளர், அரசு கூடுதல் செயலாளர் உள்ளிட்டோருக்கு 5 ஆயிரம் மனுக்கள் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

    எங்கள் பகுதிக்கு இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை பி.ஏ.பி., பாசன திட்டத்தின் கீழ் தண்ணீர் வரும். அதை நம்பி விவசாயம் செய்து வருகிறோம். கடந்த 15 ஆண்டுகளாக பி.ஏ.பி., பொறியாளர்கள் செய்து வரும் முறைகேடான பாசன நீர் வினியோகத்தால் எங்கள் வாழ்வாதாரம் முற்றிலும் சீரழிந்து விட்டது. பி.ஏ.பி., சட்ட விதிகளின்படி பாசன நீர் வினியோகிக்கப்படுவதில்லை.

    தண்ணீர் திருட்டில் ஈடுபடுபவர்கள் மீது இதுவரை பாரபட்சமின்றி மின்துண்டிப்பு போன்ற கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், உடந்தையாக செயல்படுகினறனர். எனவே, பி.ஏ.பி., அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து எங்களுடைய வாழ்வாதாரத்தை மீட்டு தருமாறு கேட்டு கொள்கிறோம். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×