search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாணவர்களுக்கு விநியோகம் செய்யப்பட்ட அழுகிய முட்டைகள் குப்பையில் வீசப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.
    X
    மாணவர்களுக்கு விநியோகம் செய்யப்பட்ட அழுகிய முட்டைகள் குப்பையில் வீசப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.

    பள்ளி மாணவர்களுக்கு அழுகிய முட்டைகள் விநியோகம் - திருப்பூரில் சத்துணவு அமைப்பாளர் சஸ்பெண்டு

    கடந்த சில தினங்களுக்கு முன்பு வாவிபாளையம் மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு அமைப்பாளர் முட்டை வினியோகம் செய்துள்ளார்.
    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 18-வது வார்டு வாவிபாளையம் பகுதியில் மாநகராட்சி தொடக் கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 143 மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இதில் 75 மாணவ மாணவிகள் சத்துணவு திட்டம் மூலம் பயனடைந்து வருகின்றனர்.

    இதனிடையே கொரோனா காலம் என்பதால் பள்ளிகள் செயல்படாமல் உள்ளது. இதனிடையே மாணவகளுக்கு சத்துணவு திட்டம் சரியாக சென்றடையும் வகையில் மாதந்தோறும் முதல் வாரத்தில் மாணவர்களுக்கு அரிசி, 10 முட்டை, 1 கிலோ ஆயில், பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வாவிபாளையம் மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு அமைப்பாளர் முட்டை வினியோகம் செய்துள்ளார். அதனை மாணவர்கள் வீட்டுக்கு எடுத்து சென்று பெற்றோரிடம் கொடுத்த போது, முட்டை அழுகி இருந்ததை பார்த்து பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து அதனை குப்பையில் வீசினர்.

    இதுகுறித்து  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு திருப்பூர் வடக்கு ஒன்றிய குழு உறுப்பினர் சிகாமணி திருப்பூர் மாநகராட்சி கமிஷனருக்கு புகார் மனு அனுப்பினார். அதில் ‘வாவிபாளையம் தொடக்கப்பள்ளியில் குழந்தைகளுக்கு வழங்க வேண்டிய முட்டைகள் அழுகிய நிலையிலும், புழுக்கள் பிடித்த நிலையிலும் இருந்துள்ளது. உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். 

    இதையடுத்து மாநகராட்சி சுகாதார துறையினர், பள்ளிக்கு சென்று தலைமையாசிரியர் மற்றும் சத்துணவு அமைப்பாளரிடம் விசாரணை நடத்தினர். மேலும் முட்டை எங்கிருந்து கொள்முதல் செய்யப்பட்டது என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

    இந்தநிலையில் சத்துணவு அமைப்பாளர் மகேஸ்வரியை சஸ்பெண்டு செய்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் இன்று உத்தரவிட்டார்.
    Next Story
    ×